இந்தியாவில் மதுவிலக்கு

இந்தியாவில் மதுவிலக்கு (Alcohol prohibition in India) என்பது பீகார், குஜராத், மிசோரம், நாகாலாந்து மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும் அமலில் உள்ளது.[1] மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி உள்ளது. இந்திய அரசியலமைப்பு (பிரிவு 47)ன் கீழ் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மதுபானம் மற்றும் போதை பொருட்களை தடைசெய்ய வேண்டுமா என அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம். ஆனால் சில குறிப்பிட்ட மதுபானங்களை மருத்துவரீதியாக மட்டுமே பயன்படுத்தலாம்.[2] இந்தியா முழுவதும் மதுபானத்தை தடைசெய்ய வேண்டும் என்று மகாத்மா காந்தி மற்றும் பல இந்திய பெண்கள் முன்மொழிந்தனர்.[3]

சமூக மற்றும் பொருளாதார விளைவுகள் தொகு

மதுபான தடைச் சட்டம் அமலில் இருக்கும் மாநிலங்களில் ஆண்களிடம் உள்ள மது அருந்தும் பழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறைந்துள்ளது. பீகார் மாநிலத்தில் மதுபானம் தடை செய்யப்பட்ட 2016ஆம் ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் கொலை மற்றும் கொள்ளை 20 விழுக்காடு குறைந்துள்ளது.[4] மேலும் கலவரம் 13 விழுக்காடும், சாலை விபத்துகள் 10 விழுக்காடு குறைந்துள்ளது. நாட்டின் பொருளாதார நோக்கில் கணக்கிடு போழுது ஒவ்வொரு குடுப்த்துக்கு செல்விடும் தொகை அதிகரித்தது- பால் விற்பனை 10 விழுக்காடு, வெண்ணை இருமடங்காகவும், இருசக்கர வாகனம் 30 விழுக்காடு, மின்சாதன பொருட்கள் 50 விழுக்காடு எனவும் உயர்ந்தது. மதுபானம் தடை செய்யப்பட்ட மாநிலங்களிள் தடைசெய்யப்பட்டதில் இருந்து மண் குடிசை வீடு செங்கல் வீடாக மாறத் தொடங்கின.[சான்று தேவை]

மதுபானம் தடைசெய்யப்பட்ட மாநிலங்கள் தொகு

பீகார் (நவம்பர் 26, 2015) அன்று பீகார் முதலமைச்சர் நிதீஸ்குமார் (ஏப்ரல் 1, 2016) முதல் பீகாரில் மதுபானம் தடைச் செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.[5] (ஏப்ரல் 5, 2016) அன்று நிதீஸ்குமார் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது, மதுபானம் இன்று முதல் தடை செய்யப்பட்டது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இன்று முதல் தங்கும் விடுதி, உணவகம் போன்ற அனைத்து இடங்களிலும் மதுபான விற்பனை சட்டவிரோதமான செயல் என்று கருதப்படுகிறது.[6] சட்டத்தை மீறினால் 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.[7]

மிசோராம் மிசோராம் மதுபானம் மொத்த தடை சட்டம், 1995 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் மதுபான விற்பனை மற்றும் நுகர்வு தடை செய்யப்பட்டது.[8] 2007 ஆம் ஆண்டில், எம்.எல்.டி.பி சட்டத்தின் படி கொய்யா மற்றும் திராட்சைகளிலிருந்து ஒயின் தயாரிக்க அனுமதிக்கப்பட்டது ஆனால் மதுபானத்தின் உற்பத்தி குறிப்பிட்ட அளவிற்க்கு மட்டுமே அனுமதி உண்டு. இந்த தயாரிப்புகளை மற்ற மாநிலங்களுக்கு எற்றுமதி செய்வது சட்டவிரோதமானது.

ஹரியானா (ஏப்ரல் 1, 1998) அன்று பான்சி லால் தலமையிலான விகாஸ் கட்சி தடையை நீக்கியது. அதற்கு முன்னதாக ஜூலை 1996 முதல் தடை அமலில் இருந்தது.[9]

ஆந்திரப் பிரதேசம் மதுபான தடை மதராஸ் மாநிலத்தில் (கரையோர ஆந்திர மற்றும் ராயலசீமா) பகுதியில் 1952ஆம் ஆண்டு முதலமைச்சராக இந்த சி. இராசகோபாலாச்சாரி அவர்கள் தடையை அமல்படுத்தினார். அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு என்.டி. ராமா ராவ் மீண்டும் தடையை அமல்படுத்தினார். 1997ஆம் ஆண்டு என். சந்திரபாபு நாயுடு]] மதுபான தடையை நீக்கினார், அதற்கு காரணம் இந்த சட்டம் சாத்தியமற்றது என்றும் வெற்றிகரமாக அமல்படுத்த இயலாது என்பதாகும்.

வறண்ட நாட்கள் தொகு

வறண்ட நாட்களில் மதுபானம் விற்பனை செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது. வறண்ட நாட்கள் எவைஎவை என்பதை அந்தந்த மாநில அரசாங்கமே முடுவு செய்ய வேண்டும். பொதுவாக அனைத்து இந்திய மாநிலங்களின் முக்கிய மதம் சார்ந்த விழா மற்றும் புகழ்பெற்ற விழாக்கலின் போழுது வறண்ட நாளாக அனுசரிக்கப்படுகிறது. தேசிய விடுமுறை தினங்களான குடியரசு தினம் (26 ஜனவரி), சுதந்திர தினம் (15 ஆகஸ்ட்) மற்றும் காந்தி ஜெயந்தி (2 அக்டோம்பர்) முழுவதும் வறண்ட நாட்களாக அனுசரிக்கப்படுகிறது. [10]

தடை செய்யப்படாத மாநிலங்கள் தொகு

ஆந்திரா, ஹரியானா, கேரளா, மணிப்பூர், மிசோரம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தடை அமலில் இருந்து பின்னர் தடை நீக்கப்பட்டது.

ஆதாரங்கள் தொகு

  1. "States with total and phase-wise prohibition of alcohol in India". The Indian Express.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-11-30. பார்க்கப்பட்ட நாள் 2019-03-30.
  3. Thekaekara, Mari Marcel (13 November 2017). "Indian women are pleading for prohibition" (in ஆங்கிலம்). New Internationalist.
  4. Anand, Geeta (15 April 2017). "Alcohol Ban Succeeds as Women Warn, 'Behave, or We'll Get Tough'" (in English). த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2 July 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Alcohol Ban in Bihar from April Next Year, Says Chief Minister Nitish Kumar". NDTV.com. 26 November 2015. பார்க்கப்பட்ட நாள் 18 May 2016.
  6. Agnihotri, Sanjana. "What led to an early liquor ban in Bihar? Why did it fail earlier?". India Today. http://indiatoday.intoday.in/story/liquor-ban-bihar-nitish-kumar-dry-state/1/636564.html. பார்த்த நாள்: 7 April 2016. 
  7. "Bihar liquor ban: 7 from Gujarat, UP jailed". Archived from the original on 6 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 18 May 2016.
  8. "Mizoram sets up committee to study impact of Liquor Prohibition and Control Act". The Indian Express. 18 July 2016. பார்க்கப்பட்ட நாள் 18 July 2016.
  9. "Haryana to lift ban from Apr 1". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 11 Nov 2016.
  10. "Three cheers to dry days!". Archived from the original on 2 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியாவில்_மதுவிலக்கு&oldid=3543778" இலிருந்து மீள்விக்கப்பட்டது