அண்ணாதாசன்.
கவிஞர் அண்ணாதாசன் திருநெல்வேலிமாவட்டம் ஆழ்வார்குறிச்சி என்னும் ஊரில் பிறந்தவர்.தமிழிலக்கியத்தில் 'இளம் முனைவர்'_பட்டம் பெற்றுள்ள அண்ணாதாசன் ஒரு கவிஞர்,கதாசிரியர்,கட்டுரையாளர்,நாடகாசிரியர்,பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
அண்ணாதாசனின் முதல் சிறுகதை
'கல்கி'_இதழில் 1987ல் வெளி வந்தது.அன்று தொடங்கிய இவரது எழுத்துப்
பயணம்இன்றுவரை தொடர்கிறது.வானொலியில் ஐம்பதுக்குமேற்பட்டநாடகங்களும்,தொலைக்காட்சியில்நாடகங்களும்எழுதியுள்ளார்.'கல்கி'_'குமுதம்'_'தினமலர்_வாரமலர்'ஆகிய இதழ்கள் நடத்தியசிறுகதைப்போட்டியில் கலந்து பரிசுகள் பெற்றுள்ளார்.'ஜெமினிமா'_மாத இதழ் நடத்திய 'கவியரசு கண்ணதாசன் நினைவுபாடல் போட்'_டியில் கலந்து இரண்டுமுறை பரிசுகள் பெற்றுள்ளார்.
'கலைமகள்'_'ஆனந்தவிகடன்'_'தாமரை'_'தாய்'_'போன்ற பிரபல்யமான இதழ்களில் சிறுகதைகள்,கவிதைகள் எழுதியுள்ளார்.இவரது 'வானம் பொய்க்காது'_என்னும் சிறுகதைத் தொகுப்பும்,_'கிராமத்து ராஜாக்கள்'_என்னும் கவிதை நூலும் சிறப்பான படைப்புகள்.
'மகளிர்க்காக'_என்னும் திரைப்படத்தில்பாடல் எழுதி,அதுமுதல் பாடலாசிரியராகவும்
வலம் வருகிறார்.