தமிழரின் நீர் வகைப்பாடு:

நீரின் அருமையை அதன் அறிவியலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்தவன் தமிழன்.எனவேதான் 'நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். தமிழரின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை நீர் முக்கிய இடம் வகிக்கிறது. அன்றைய தமிழர் நீர் மேலாண்மை தெரிந்தவர்கள்.அதன் பயன்பாடு அறிந்தவர்கள்.

நீர்நிலைகள்:

சுனை,கயம்,பொய்கை,ஊற்று: தானே நீர் கசிந்த நிலப்பகுதியாகும்.இது பெரும்பாலும் மலைப்பகுதிகளில் காணப்படும்.

குட்டை: மழை நீரின் சிறிய தேக்கம்.

குளம்:மழை நீரின் பெருந்தேக்கம்.பரலவாக விழும் மழை நீரை திருப்பி குறிப்பிட்ட இடத்தில் சேமிப்பது.குளிப்பதற்கு பயன்படுவது.

ஊருணி:ஊறும் நீர் என்பது மருவி ஊருணியானது.ஆற்றங்கரை ஓரங்களில் மணற்பாங்கான நிலத்தை தோண்டும்போது ஊறுவது.இது குடிப்பதற்கு பயன்படும் தூய்மையான நீர்.

ஏரி:மழை நீர் வாய்க்கால் வழி வந்தடையும் ஊரின் பொதுவான நீர் பரப்பு.ஏர் தொழிலுக்கு பயன்படுத்தப்படுவது(ஏர்+நீர்)

ஏந்தல்:மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலை.பறவைகளின் தாகம் தணிக்க பயன்படுவது.

கண்மாய்:கண்ணாறுகளை உடையது

கிணறு:ஊற்று உள்ள சமநிலப்பகுதியை தேர்ந்தெடுத்து தோண்டப்படுவது. இதுவே பெரும்பாலான மக்களுக்கு குடிநீராக பயன்படுகிறது. உவர்பாக இருப்பின் கிணற்றில் நெல்லி வேரினை இட தன்மை மாறும். உழவிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:அவையம்_தமிழி&oldid=2878455" இலிருந்து மீள்விக்கப்பட்டது