ஆருத்ரன்
வணக்கம்....என்பெயர் ஆருத்ரன், எனது மாவட்டம் தென்ஆற்காடு வள்ளலார் மாவட்டம் எனப்பட்ட
கடலூர் மாவட்டம். செந்தமிழரசன் என்கிற அருண்குமார் என்பதுவே என் அம்மை'யப்பன் இட்ட பெயர்.. நான் பிறந்தது...புனிதர் வள்ளலார்,சன்மார்க்கம் எழுப்பிய திருக்கோவிலின் எதிரிலுள்ள தாய்சேய் மருத்துவமனை.. எங்களது பாட்டன் பூட்டன் பூர்வீகம் அனைத்தும் அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தின் மையப்பகுதியான நெய்வேலியின் மேற்கேயுள்ள ஆதாண்டார்கொல்லை என்பதுவே...நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உருவாக அழிக்கப்பட்ட சில பசுமை கிராமங்களில் அதுவும் ஒன்று....
விபரம் தெரிந்தது முதல் என் வாழ்க்கையை என்னுடன் பகிர்ந்துகொண்ட வாழ்விடம், கார்ப்பரேட் நகரியம் நெய்வேலி. நெய்வேலி என்னும் நகரியம் நான் அதிக விரும்பிய நகரங்களில் முதன்மையானது.,காரணம் சாலையோர பசுமையும் நகரத்தின் தூய்மையுமே..
அங்கு சுற்றுப்பட்டிலேயே பிறந்து வளர்ந்ததாலேயோ என்னவோ!நெய்வேலியும், அதனை சுற்றியுள்ள கிராமங்களின் பசுமைகள் நெஞ்சின் பசுமரத்தாணிகளானது...தவழும் பருவத்தை சின்ன சேலத்திலும் மழலை,பள்ளி &டீன்ஏஜ் பருவத்தை நெய்வேலி நகரியத்திலும் கழிந்தது.. பின் பொறியியல்,மேலாண்மை,பட்டயங்கள்,வேலை என வாழ்க்கை அதிகம் பயணப்பட்ட இடங்கள் கோவை,சென்னை,நெல்லை,திருப்பூர்,மதுரை,பாண்டி,மும்பை,புனா என்று ஓடி
இடம் : கடலூர் மாவட்டம் பிறந்த தேதி : 03-Nov-1984 பாலினம் : ஆண் சேர்ந்த நாள் : 18-Nov-2012 பார்த்தவர்கள் : 7 புள்ளி : 0