ஆலயத்தின் பெயர்

சீர்பொலியும் உலகெலாம் உணர்ந்து சிவபூமியெனப்போற்றப்படும் இலங்கையின் வடபால் நீர்வளமும், நிலவளமும் பல்லுயிரும் பல்கிப்பெருகும் வனவளமும் சுற்றுப்புறமெங்கும் கடல்வளமும் பொருந்திய கிளிநொச்சி மாநகரின் மத்திய பிரதேசத்திலே எழுந்தருளி அருளாட்சி புரியும் திருவருள் மிகு ஆலடி விநாயகர் ஆலயம் என்பதே பெயராகும்.

இராமநாத வள்ளல் தன் ஈகையால் மக்களுக்கு உவந்தளித்த குடியிருப்பு நிலங்களும் அவற்றோடிணைந்த வயல் நிலங்களும் அமைந்த இராமநாதபுரம் மத்தியில் ஆலமரம் நிழல்பரப்ப இயற்கை எழில் நிறைந்த திருத்தலமாக விளங்கும் திருவருள் மிகு ஆலடி விநாயகர் ஆலயம் என்ற பெயர் காரணப்பெயராகவே தோன்றி வழங்கப்பட்டு வருகின்றது.

"ஆனை முகத்தானை ஆர்தொழுதாலும் மெய்நிலைக்கும் மேன்மைகள் தொடரும்

கற்றுணர்வர் காலத்தை வென்றிடுவர் உற்ற மதிக்கூற்றால் உயர்ந்திடுவர்

முற்றுமறிந்திடுவர் முக்காலமும் வாழ்ந்திடுவர் வாழ்வே"


அழகரத்தினம் சத்தியன் 0774560992 தலைவர் - ஆலய அறங்காவலர் சபை

முதலாவது பிரமோஷவ விஞ்ஞாபனம் 2016


2016ஆம் வருடம் முதலாவதாக மகோஷவம் கொடியேற்றத்துடன் 06.08.2016 காலை வெகு விமரிசையாக ஆரம்பித்துள்ளது.