குலதெய்வம் மனிதனுக்கு அவசியம்;

அருள்மிகு ஸ்ரீ அருச்சுனனை காத்த

அய்யனார் சுவாமி 🔥 ஓம் ஸ்ரீ நரி நல்லமாடசாமி துணை🙏

குலதெய்வம் அதன் முக்கியத்துவம்

🙏நாள் செய்யாததை கோள் செய்யும்

கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்.

🙏பாதையை  காட்டுபவன் இறைவன்(தளவாய் நல்ல மாடன்) அதில் பயணிப்பவன் மனிதன். அவன் காட்டிய பாதை சரியன நம்பிக்கை கொண்டு செய்வதையும் செய்யபோவதையும் அவனை நம்பி போய்கொண்டே இரு.

🙏நம்பினால் அவன் குறித்தது நடக்கும் .நம்பாவிடில் உனக்கு விதித்தது கிடைக்கும்.

🙏நான் என் விருப்ப தெய்வத்தை வழிபடுகிறேன்.அவரை வணங்கினால் எனக்கு எல்லா வளமும்  கிடைக்கும். உண்மைதான், உன் விருப்ப தெய்வத்திற்கு உலகமெங்கும் பிள்ளைகள் . ஆனால் உன் குலதெய்வத்திற்கோ(தளவாய் நல்லமாடசாமி) நீங்கள் மட்டுமே பிள்ளைகள்.

🙏 ஆகவே நாம் சிந்திப்போம் வழிபடுவோம் நம் ஆண்டவனை.

🙏உன் தகப்பனை பட்டினி போட்டு வேறு எவ்வளவு பெரிய புன்னியங்கள் யாகங்கள் செய்தாலும்  அது உனக்கு எந்த வித பயனும் தராது .

🙏 உதாரணமாகவும் ஆதாரபூர்வமாக கூறினால்,

நம் இந்து தர்மத்தின்படி, முழுமுதற் கடவுள் பிள்ளையார். எந்த வித செயல்பாடுகளை எடுத்து கொண்டாலும் நம் தொடக்கம் கணபதி ஹோமம்.

🙏 அந்த கணபதி ஹோமம் தெடங்வதற்கு முன் ஹோமம் வளர்க்கும் பிராமணர் கூறுவது, ''குலதெய்வத்தை வணங்கிகோங்கோ ஹோமம் வளர்க்க நாழி ஆயுடுத்து " என்பார் . இது போதாதா குலதெய்வத்தின் மகத்துவத்தை அறிய.

🙏 நம்பியவருக்கு அவன் அப்பன் நம்பாதவருக்கு அவன் கல்தான்.எல்லாம் அவன் அருளாலே என்று நம்புங்கள் அந்த நம்பிக்கை தான் கடவுள். ஓம் ஸ்ரீ நரி நல்லமாடனே போற்றி

           

                        நன்றி 🙏