இசையரசி
Joined 17 மே 2021
"உள்ளத்துள்ளது கவிதை இன்பம் உருவெடுப்பது கவிதை" என்ற வரிகளுக்கு ஏற்ப தன் உள் மனதில் எழுகின்ற உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும் விதமாக புனையப்படுவது கவிதை. கவிதை பல கோணங்களில் தோன்றி வளர்ந்துள்ளன. மரபு கவிதை, வசன கவிதை என்று கவிதைகள் விமர்சையாக பேசபட்ட நிலையில் இன்று புதுகவிதை,ஹைக்கூ,சென்ரியூ, லிமரைக்கூ,லிமரிக்,லிபுன்,ஹைபுன், கஸல்,குறட்கூ,சீர்க்கூ என்ற வடிவங்களாக வளர்ச்சிப் பெற்றுள்ளன. இத்தகைய கவிதைகளின் வழியே புரட்சிகளை நிகழ்த்தி வருகின்றனர் கவிஞர்கள்.