இல சௌ தாமரைக்கண்ணன் திண்டுக்கல் பகுதியை சார்ந்தவர். தற்போது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். டி வி எஸ் குழுமத்தை சேர்ந்த தனியார் தானியியங்கி வாகன உதிரி பாக தொழிற்சாலையில் திறன் மேம்பாட்டுப்பிரிவில் பணிபுரிகிறார். அடிப்படையில் கருவி மற்றும் அச்சு உருவாக்கம், வடிவமைப்பு பற்றிய பட்டயப் பொறியியல் படித்தவர். வரலாறு, மொழி மற்றும் சமகால அரசியல் பற்றி படிக்க, பேச, எழுத ஆர்வம் உள்ளவர்.