தமிழ் பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவன். இயற்பெயர் நவநீதன். ஆங்கிலத்தில் கூகுள் செய்த ஆரம்பக் காலங்கள் தொட்டே விக்கிபீடியாவை அறிந்திருந்தேன். ஆனால், பார்வையிட மட்டுமே அதனை பயன்படுத்தினேன். பிற்காலத்தில் தமிழ் விக்கி அறிமுகமான பிறகும் அதுவே கதை. ஒரு முறை செல்வி ஜெயலலிதா பற்றிய தகவல்களுக்காக தமிழ் விக்கியை நாடிய போது, அ.இ.அ.தி.மு.கவின் தலைவராக அவர் செயல்படுவதாகப் படித்தேன். உண்மையில் தமிழக அரசியலில் கலைஞர் கருணாநிதி மட்டுமே தன்னை தலைவர் என்று முன்னிருத்திக் கொண்டவர். அண்ணா, திமுகவை துவங்கும் போது, பெரியாரை தலைவராக பாவித்து அந்த நாற்காலியை காலியாகவே வைத்து தன்னை பொதுச்செயலாளராக அறிவித்தார். அ.இ.அ.தி.மு.கவைத் துவங்கிய எம்.ஜி.ஆரும் இறந்து விட்ட அண்ணாவை தலைவராக பாவித்து பொதுச்செயலாளராகவே இருந்தார். அதே பாரம்பரியத்தில் தற்போது எம்.ஜி.ஆரை தலைவராக பாவித்து செல்வி ஜெயலலிதா பொதுச்செயலாளராகவே உள்ளார். இந்தத் தகவலை அறிந்திருந்தும் விக்கியில் அதை ஏற்றம் செய்யாமல் இருக்க முடியவில்லை. அதனாலேயே பயனர் கணக்கை உருவாக்கினேன். அது தவிர வேறு பங்களிப்புகள் இல்லை. இனியேனும் நேரம் ஒதுக்கி பங்களிப்புகள் தர வேண்டும் என்று நினைத்துள்ளேன். நன்றி!

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:இளங்கிழவன்&oldid=852226" இலிருந்து மீள்விக்கப்பட்டது