உடுவில் அரவிந்தன் (Uduvil Aravinthan) 1972 இல் பிறந்தவர். யாழ்ப்பாண மாவட்டத்தின் உடுவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். உடுவில் மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் பயின்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் B.S.M.S பட்டப்படிப்பையும் களனி பல்கலைக்கழகத்தில் வைத்தியசாலை முகாமைத்துவத்தில் M.Sc பட்டமேற்படிப்பையும் நிறைவுசெய்தவர். கவிதை, சிறுகதை, ஓவியம், கட்டுரை ஆகிய துறைகளில் தன்னை வௌிப்படுத்துகின்றார்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 'இந்து இளைஞன்' சஞ்சிகையில் (1985) இவருடைய முதலாவது கவிதை வெளியானது. முதலாவது சிறுகதை 'தியாகதீபம்' (1987). இவர் 1997 தொடக்கம் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் சிறுகதைகள் எழுதிவருகின்றார். 2018 வரை எல்லாமாக 48 சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சிறுகதைகள் உள்ளடங்கிய ' மண்ணின் மலர்கள்' தொகுதியிலும், யாழ். திருமறைக்கலாமன்றத்தின் புத்தாயிரமாண்டு சிறுகதைத்தொகுதியிலும், 'இங்கிருந்து' தொகுதியிலும் இவரது சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளன.

இவருடைய சிறுகதைத்தொகுதிகள் - உணர்வுகள் (1999), பாழ்வௌி (2017)

தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் செயலாளர் (1998 - 2006)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:உடுவில்_அரவிந்தன்&oldid=2803604" இலிருந்து மீள்விக்கப்பட்டது