எட்டியலூர் சில தகவல்கள் ,

                                                    திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் வடகண்டம் பஞ்சாயத்தை சேர்ந்த கிராமம் எட்டியலூர் . பேச்சு வாக்கில் சொல்லும் ஊரின் மொத்த அளவு 32 வேலி ( ஒரு வேலி =  20 ௦ மா , 3 மா = ஒரு ஏக்கர் ) பக்கத்தில் இருக்கும் தியாகராஜாபுரம் அரசு விதைப் பண்ணையின் அளவும் இவ்வளவே . எட்டிய லூர் நில அளவுகள், ஊர் மக்கள் எண்ணிக்கை சமபந்த மான அரசு பூர்வ தகவல் களை விரைவில் பகிர்கிறேன்.

முக்கிய தொழில் ;  விவசாயம்  



வீடுகளின் எண்ணிக்கை : 300 ( அனுமானமாய்)

மக்கள் தொகை ;  -----------?


ஒட்டு எண்ணிக்கை : ----------?

இந்த ஊரின் வாழ்வாதாரம் நிலமும், கால்நடையும் மட்டுமே என்ற நிலையிலிருந்து மாறி 15  வருடங்கள் ஆகிவிட்டிருகிறது . நகரம் நோக்கியும் , வெளிதேசம் சென்றும் வாழ் நிலைகளை பெருக்கிக்கொள்ளும் படிக்கு இந்த தலை முறை வந்துவிட்ட காரணத்தால்  பணம் புழங்கும் கிராமமாக அந்த  பகுதியில் இது விளங்குவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை . ஆனாலும் விவசாயத்தின் மீதான காதல் இன்னமும் சில ஈரம் கனிந்த மனங்களிடையே  அங்கேயும்  இருக்கத்தான் செய்கிறது .

காவிரியின் கிளையான வெட்டாற்றிலிருந்து "எண்கண் " மடையில்  பிரியும்   ஓடம்போக்கியின்  பாசனமும் பின் தன்வழி தொடரும் வெட்டாறின் ஓரத்திலேயே அமையப்பெற்றதுமான ஊர் எங்களுடையது .. திருவாரூரிலிருந்து குடந்தை செல்லும் தேசிய சாலையில் 8 வது கிலோ மீட்டரில் வெட்டாற்றை தாவி கடக்கும் பாலத்திற்கு வலது புறம் செல்ல 2 வது கிலோ  மீட்டரில் எட்டியலூர்

அதே போல் ஆரூரிலிருந்து மாயூரம் செல்லும் நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டரில் அதே வெட்டாற்றை மறித்து தாவும் பாலத்திற்கு இடமாக  செல்ல இன்னொரு ஐந்தாவது கிலோமீட்டரில் . குடந்தை நெடுஞ்சாலைக்கும் மாயுரம் நெடுஞ்சாலைக்கும் பைபாஸ் செய்யும் வெட்டாற்றின் ஓரத்தில் அமைந்திருக்கும் கிராமங்களில் கொஞ்சம் நிறையவே செழிப்பான ஊர் இது.

ஆரூரிலிருந்து எங்கள் ஊருக்கு மேல் சொன்ன இரண்டு தடங்கள் வழியாகவும்  சிற்றுந்துகள்  இயக்கபடுகின்றன ..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:எட்டியலூர்&oldid=3949163" இலிருந்து மீள்விக்கப்பட்டது