நான் இலங்கை கொழும்பு பீர் சாஹிபு வீதியை பிறப்பிடமாகக் கொண்டவன். எனது தந்தை காலஞ்சென்ற கே. கே. எம். மொஹிதீன். தாய் சித்தி செளதா உம்மா. என் மூத்த சகோதரர் இக்பால், இளைய சகோதரர் பிர்தெளஸ் ஒரேயொரு தங்கை ஆதிலா. கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி மகாவித்தியாலயம் நான் பயின்ற கல்விக்கூடம். எனது தந்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம், ஹிந்தி உட்பட மேலும் பல மொழிகள் பேசும் ஆற்றல் உடையவராக இருந்தார். பழம் பெரும் தமிழ் கவிதைகளை இடத்திற்கேற்ப சொல்லி கேட்போரை கவரும் ஆற்றலும் அவரிடம் இருந்தது. அந்த மரபு வழி என்னையும் தொற்றிக்கொண்டது. தென்னிந்திய “குமுதம்” சஞ்சிகையில் (1968)ல் ராமுவின் ஓவியங்களுடன் எனது முதல் ஆக்கம் பிரசுரமானது. 1993இல் எனது ‘பனித்தீ’ என்ற கவிதை தொகுதி எமது ‘இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தினால்’ வெளியிடப்பட்டது. எனது மனைவி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன். பிரபலமான பத்திரிகையாளர், எழுத்தாளர். தினபதி -சிந்தாமணி பத்திரிகையில் கடமையாற்றியவர்.ஒரே மகள் நூருஸ் ஷஃப்னா நஜ்முல் ஹுசைன்சட்டத்தரணியாகிவுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:என்.நஜ்முல்_ஹுசைன்&oldid=1838232" இலிருந்து மீள்விக்கப்பட்டது