எஸ்.உதயபாலா
Joined 8 ஆகத்து 2020
கருத்தீ
கருத்தீ என்பது தமிழுக்கு புதிய சொல்லாகத் தருகிறேன். கருத்தா என்றால் தலைவன் எனப்பொருள் படும். அப்படியெனில் கருத்தா என்பதன் பெண்பாலாக கருத்தீ இருக்கலாமே.
இதை வைத்து மட்டுமே ஒரு புதிய சொல்லாக நான் கருத்தீயை உருவாக்கவில்லை. எனது அன்னைத் தமிழிழ் ஒரு பெண் நல்ல குண நலன்களோடு இருந்தால் அவளை நல்ல கருத்துக்காரி என்பார்கள். அந்த கருத்துக்கள் நிறைந்தவள்தான் இந்த கருத்தீ.
மேலும், அடர் வண்ண பெண்களை கருப்பி என்ற இழி சொல்லில்தான் வழங்கி வருகிறார்கள். அது தவறு. அதற்கு மாற்றாக கருத்த அழகிய பெண் என்று குறிப்பிடும் நோக்கில்தான் என் காதலியை கருத்தீயாக மாற்றியிருக்கிறேன்.
கருத்தீ என்பது தவறான சொல் இல்லை. இலக்கணப் பிிழை இல்லை. தமிழுக்கு நான் புதிிிதாகஒரு சொொல் தருகிறேேன்.
கருத்தீ என்றால் தலைைவி, தலைமகள், தமிழ் மகள், அழகிய பெண்.