பிறப்பு

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகா ஆவரைகுளம் ஊராட்சியில் சிவஞானபுரம் என்ற குக்கிராமத்தில் 1985 ம் வருடம் ஏப்ரல் மாதம் 13 ம் தேதி வே.ஐயாபழம் - மனோமல்லிகா தம்பதியினரின் மூன்றாவது மகனாக பிறந்தார். இவரின் உடன்பிறந்தவர்கள் இரண்டு மூத்த சகோதரர்கள் முறையே சிவ வேல் முருகன், சிவராமவேல் ஆகியோர் ஆவர்.

கல்வி

இவர் தனது ஆரம்ப கல்வியை ஆவரைகுளத்தில் றி.டி.றி.ஏ துவக்கப்பள்ளியிலும், இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வியை ஆவரைகுளத்தில் பாலையா மார்த்தாண்டம் நினைவு மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பின்னர் இளநிலை அறிவியல் இயற்பியல் படிப்பை தெ. கள்ளிகுளம் ஊரில் திருநெல்வேலி தெக்ஷணாமாறா நாடார் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்றார். பின்னர் சட்டக்கல்வியை பெங்களூரில் ராதாகிருஷ்ணன் சட்ட கல்லூரியில் பயின்றார்.

அரசியல்

தனது அரசியல் வாழ்க்கையை சிதறால் ராஜேஷ் தலைமையிலான தமிழ்நாடு சிவசேனாவில் திருநெல்வேலி மாவட்ட பொது செயலாளராக ஆரம்பித்தார். அதன் பின்னர் ஆர். எஸ். எஸ் அமைப்பில் பணியாற்றி வந்தார். அதன்பின்னர் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார்.