ஒரிசா பாலு
பிறந்த தேதி07/04/1963
பிறந்த இடம்உறையூர், திருச்சி

ஒரிசா பாலு தொகு

திரு சிவ பாலசுப்ரமணி (ஒரிசா பாலு)1963 ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள் திரு சிவஞானம் ராஜேஸ்வரிஅவர்களுக்கு திருச்சி உறையூரில் ஆறாவது மகனாய் பிறந்து , தமிழகத்தின் விழுப்புரம் ,புதுவை நெய்வேலி சென்னை போன்ற பல இடங்களில் வளர்ந்து இயற்பியலில் தேர்ச்சி பெற்று சுரங்கம் மற்றும் வெளி நாட்டு கருவிகளை பழுது பார்க்கும் வேலைகள் தொடர்பான பொறி இயல் துறையில் பல வருடங்கள் ஒரிசாவில் பணிபுரிந்து அங்கு இருந்து இந்தியா முழுவதும் சுற்றி வந்தவர்.

வாழ்கை மற்றும் தொழில் தொகு

நீர் மேலாண்மை , காடுகள் மேலாண்மை, மரபு சார் அறிவியல் , உழவில் ,மொழிகள் , பண்பாடு ஒப்பிட்டுவியலில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்.

ஒரிசாவில் கனிம வள கண்டுபிடிப்பு ஆய்விற்காக ஆஸ்திரேலிய புவி இயற்பியல் நிறுவனத்தின் செய்மதிகளின் உதவியுடன் விமான மூலமான ஆய்வுகளில் தேர்ச்சி பெற்று அந்த ஆய்வுகளை கள ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யும் குழுவில் பணி புரிந்தவர்.

தமிழர்களின் கடல்சார்தொன்மை தொடர்பான ஆய்வுகளை தொடர்ந்து செய்து வருபவர், ஒரிசா புபனேஸ்வர் தமிழ் சங்கத்தில் துவக்கஉறுப்பினராகசேர்ந்து ,பல பொறுப்புகளில் இருந்து 2002-2003 செயலர் ஆக பணியாற்றி தமிழர்களை ஒரிசாவில் ஒருங்கிணைத்துஅவர்களை உலக ஏனைய தமிழ் மக்களோடு நெருங்கி பழக வைத்தவர், உலக தமிழ் அமைப்புகளை ஒன்று சேர்க்க ஆர்வம் காட்டி வருபவர்.

ஒரிசாவில் அவர் செய்த கலிங்க தமிழ் தொடர்புகள் மற்றும் தமிழகத்தில் அவர் செய்த தமிழ் - கலிங்க தென் கோசல ,ஒட்டர தொடர்பான தமிழியல்ஆய்வுகள் தமிழர்களின் பெருமையை நிலை நாட்டிய செயல் ஆகும்.

ஒரிசா என்ற கிளைகளில் தமிழை தேடிய அவர் அவருடைய வெகு நாள் தொழில் நுட்பம் மற்றும் மரபு சார்ந்த பணிகள் தொடர்பால். குமரி கண்டம் மற்றும் லெமுரியா கடல் ஆய்வுகளில் ஈடுபட்டு, இன்று மீன்கள் இனபெருக்கம் செய்யும் இடங்கள் கடலில் மக்கள் வாழ்ந்த நில பகுதிகள் என்று செய்மதி ,நவீன கடல் சார் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் கடலில் கள ஆய்வு செய்து லெமுரியா குமரிகண்டம் ,கடல் கொண்ட தென்னாடு ,தென் புலத்தார் , போன்ற கருதுகோள்களை தமிழ் இலக்கியம் சொன்ன கடல்கோள்கள் செய்திகளின் மூலம் ஒப்பிட்டு கடலில் ஆய்வுகள் பல செய்து அவையின் அடிப்படி உண்மைகள் என்ன என்று கடலில் கள ஆய்வுகள் மூலம்நிருபித்து வருகிறார்.

அதே போல் இன பெருக்கத்திற்கு தமிழக ஒரிசா கடற்கரையில் வரும் கடல் ஆமைகள் தொடர்பான இடங்கள் பிற் காலத்தில் துறை முகமாய் மாற்றப்பட்டதையும் , ஆமைகள் நம் கடற்கரைகளை தேடி கடல் நீரோட்டத்தில் வரும் வழிகள் , நம்முடிய கடலோடிகளால் பயன் படுத்த பட்டு அவர்கள் உலகம் முழுவதையும் வலம் வந்த ஆமைகள் தொடர்ப்பான இடங்கள் நான்கு ஆயிரத்திற்கு மேற்பட்டு ,தமிழ் பெயராலேயே விளங்குவதை ஆய்வுகள் செய்து உறுதி செய்து வருபவர், அந்த இடங்களில் தமிழ் மொழி மற்றும் பண்பாடுகள் இன்றும் இருப்பதை நிருபித்து வருபவர். கடலோடிகளை மீனவர்களை வெறும் பாய் மரத்தில் , மீன்பிடிப்பவர்களாக மட்டும் பார்க்காமல் கடல் சுற்று சூழல் அறிவு பெற்றவர்களாக பார்ப்பவர். கடல் வள மேலாண்மையின் உலக நடப்புகளை மீனவர்களுக்கு பயிற்சி தந்து வருகிறார்

புவியின் சுழற்சியில் தீபகற்ப பகுதிகளிள் ,தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்கள் அவர்கள் இயற்கையின் பயன்பாட்டை உலகிற்கு முதலில் கடல் மூலமாக சென்று அறிமுக படுத்தியவர்கள் என்பதை தமிழர்களின் கடல் சார் மேலாண்மை , இரும்பு நாகரிகம், வேளாண்மை நாகரிகம் ,நெசவு குயவு கட்டிட கலை போன்றவைகளின் மூலம்தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் நிருபித்து வருபவர்.

ஆழ கடல்மீனவர்கள், நீர் மூழ்கிகள் மற்றும் பாய் மர கப்பல் ஓட்டுபவர்களை ஒருங்கிணைத்து பல் வேறு தொழில் நுட்பங்களை அவர்களிடம் அறிமுக படுத்தி வருபவர் , அதே சமயத்தில் அவர்களின் கடல் சார் மேலாண்மையை உலகிற்கு தொலைகாட்சிகளின் மூலம் அறிமுக படுத்தி வருபவர்.

தமிழர்கள் கடல் சார் மரபு மற்றும் சுற்று சூழலை காக்க வேண்டு என்பதில் உறுதியாக இருந்து தமிழகம் முழவதும் காணொளி காட்சிகள் நடத்தி வருபவர்,முக நூல் மூலமாகவும் விழிப்புணர்வு செய்து வருகிறார்.

வரலாறு ,சங்க கால தமிழ் இலக்கியம் என்பது வருங்கால சமுகத்திற்கு வழிகாட்டிகளாக இருக்கும் என்பது அவருடிய நம்பிக்கை, அதன் மூலம் பல சிக்கல்களை இயற்கை சார் வள மேலாண்மை தீர்த்து கொண்டு வருகிறார்.

நுளையர் ,முக்குவர் ,நாவியர்,பள்ளர , குடும்பர் ,ஒட்டர் ,அளவர் , வாதிரியார்களை மற்றும் மென் புல மக்களை பற்றிய அவருடிய ஆய்வு முயற்சிகள் தொடருகின்றன, இணைய உலகில் வரலாறு மற்றும் மரபு மற்றும் சுற்று சூழல தொடர்பான் குழுமங்களுடன் நெருங்கி பழகுபவர் பல மாணவர்களின் கடல் சார் ஆய்வுகளுக்கு துணை புரிந்து வருகிறார்.

கடலார் என்ற மீனவர்கள் சார்ந்த மாத இதழுக்கு ஆலோசகராய் பணிபுரிபவர். மீன் வளம் , பாய் மர கப்பல் ,நீர்மூழ்கிகள் , மானுடிவியல் , விலங்கு மற்றும் தாவரம் , கடல் சார் தொல்லியல் ,வரலாறு, பண்பாடுகள், ஆமைகள்ஆய்வு, பாறைஓவியங்கள், இயற்கை சார்ந்தபுவி சுழற்சி தொடர்பாக செய்மதி குழுமம் ,கடல் சார் குழுமம், மற்றும் ஏனைய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

தற்சமயம் சென்னையில் வசித்து வரும் இவர், ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தை துவங்கி உலக மக்களுக்கு நம்முடிய தீபகற்ப கடல் சார் மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தஇயங்கி வருபவர்.

தற்பொழுது மரபு சார் அறிவியல் தொடர்பான ஆய்வு கூடத்தில் மாற்று உயிரி எரிபொருள் மற்றும் மரபு சார் மருந்தியல் ஆய்வுகள் சார்ந்த பணியில் முழு நேர இயக்குனராக இருந்து வருகிறார்.

இதுவரை 300 இடங்களுக்கு மேலாக சொற்பொழிவுகள் ஆற்றி இருக்கிறார் , தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வருகிறார் , புவியின் சுழற்சியின் மிக மையமான பகுதியில் கடல் சூழ்ந்து உள்ள தமிழர்களின் தொன்மைக்கு காரணமான மெய் இயலை நோக்கிய தேடலில்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ஒரிசா_பாலு&oldid=1448455" இலிருந்து மீள்விக்கப்பட்டது