எஸ்.மோட்டூர் (S.MOTTUR) தொகு

நாடு : இந்தியா

மாநிலம் : தமிழ்நாடு

மாவட்டம் : கிருஷ்ணகிரி

ஊராட்சி : செம்படமுத்தூர்

கிராமத்தின் பெயர் : எஸ்.மோட்டூர்

அ.கு.எண் : 635 122

        எஸ்.மோட்டூர் என்பது தமிழ்நாட்டின் எல்லைப்புற மாவட்டங்களில் ஒன்றாகிய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள செம்படமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமமாகும். 

பெயர்க் காரணம்: தொகு

         மோட்டூர் என்ற பெயர் நிறைய ஊர்களுக்கு சூட்டப்பட்டிருப்பதால் அடையாளம் கருதி செம்படமுத்தூர் என்பதின் முதல் எழுத்தான (ஆங்கிலம்) "S" சேர்த்து S.மோட்டூர் என்று பெயர் உருவாக்கம் பெற்றது.

தென்பெண்ணை: தொகு

          இக்கிராமத்தை ஒட்டி தமிழ்நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றான தென்பெண்ணை நதி பாய்கிறது. எனவே இவ்வூரில் விவசாயம் செழித்து விளங்குகிறது. நெல், கரும்பு, வாழை, கேழ்வரகு, தக்காளி போன்றவை பெருமளவில் பயிரிடப்படுகிறது. 

பள்ளி: தொகு

          இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. சுமார் 90 மாணவ மாணவியர் கல்வி பயில்கின்றனர். மேலும் அங்கன்வாடி மையம் ஒன்றும் அமைந்துள்ளது.

மக்கள்தொகை : தொகு

            இவ்வூரின் மக்கள்தொகை சுமார் 400 ஆகும். ஆண்களும் பெண்களும் ஏறக்குறைய சம அளவில் உள்ளனர். செம்படமுத்தூர் ஊராட்சியின் இரண்டாவது பெரிய ஊராக எஸ்.மோட்டூர் விளங்குகிறது.

இளைஞர் மன்றம்: தொகு

            இவ்வூர் இளைஞர்கள் ஒருங்கிணைந்து 'மகாகவி பாரதியார் இளைஞர் நற்பணி சங்கம்' ஒன்றை ஏற்படுத்தி சமூகப்பணி ஆற்றி வருகின்றனர். இவர்களின் சேவையை பாராட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  2015 ஆம் ஆண்டின் சிறந்த இளைஞர் மன்றமாக தேர்வு செய்யப்பட்டு ரூ. 25000 பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

கோவில்கள்: தொகு

            இவ்வூரில் அமைந்துள்ள ஓம்சக்தி கோவில் சிறப்புப் பெற்று விளங்குகிறது. வேறு ஊர்களில் உள்ள பக்தர்கள் பலரும் இங்கு வந்து மாலையணிந்து மேல்மருவத்தூர் செல்வது வழக்கம்.  இது தவிர மாரியம்மன் கோவில், கருமாரியம்மன் கோவில், விஷ்ணுதேவி கோவில், பிள்ளையார் கோவில் ஆகியவை அமைந்துள்ளன.