கவிஞர் கங்கை மணிமாறன்
Joined 4 சூன் 2013
யான்- "கவிஞர் கங்கை மணிமாறன்" என்று தமிழ் கூறும் நல் உலகத்தால் அறியப் பட்டவன்.தமிழைத் தமிழாகப் பேசியும் எழுதியும் வருபவன்.தமிழ் ஆசிரியப் பணியில் வாழ்பவன்.மந்திரச் சொற்கள்-மகுடி வார்த்தைகள்-சுந்தரத் தமிழ் நடை சொந்தமெனக் கொண்டவன்.இலக்கிய-ஆன்மிக-சமூகத் தளங்களில் எழுச்சிமிகு கருத்துகளை மேடைகள் வழியே பதிவு செய்துவரும் பாவலன். ஓ..தமிழா..உன்னைத்தான்!...நடைபழகும் நந்தவனம்..கவிதை நடையில் காமத்துப்பால்...கவிதை நடையில் அறத்துப் பால்..முதலிய, புதிய சிந்தனை பூக்கும் நூல்களுக்குச் சொந்தக்காரன்.நாக்கெல்லாம் தமிழ் மணக்கும் நாகை மாவட்டத்தில்,குத்தாலம் வட்டத்தில் கங்காதரபுரம் என்னும் சிற்றூரில் பிறந்த செந்தமிழ்க் குயில்.ஒருமணிநேரம் தமிழ்பேசினால் ஒருசொட்டு ரத்தம் ஊறித் தீரவேண்டும் என்னும் வேட்கையோடு தமிழ்பேசும் தன்மானத் தமிழன்.கடல்தாண்டியும் சென்று காவியத் தமிழ் பேசிய அனுபவம் கொண்ட அடுக்குமொழிப் பேச்சாளன்.நாடி நரம்புகளில் ஓடிவரும் உற்சாகத் தேனூற்றாக உணர்ச்சித் தமிழைப் பரிபாலனம் செய்யும் பக்குவம் கற்ற பாட்டுத் தேனீ! அறிமுகம் போதும். அறியார்முன் இதற்கும் மேலாய் அதிகம் பேசல் அழகன்று!"நீர் நீடாடின் கண்ணும் சிவக்கும்"என்பது சங்கப் பாட்டனின் தங்கத் தமிழன்றோ..? கட்டுரைகள் வழியே இந்தக் கங்கை--இனிப் பொங்கிப் பூரிக்கும் என்பதைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.நன்றி விக்கிமீடியா நண்பர்களே!
என் அலைப் பேசி எண்:9443408824