கவிஞர் பச்சியப்பன்

தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம் , பெரிய அய்யம்பாளையம் என்ற கிராமத்தில் 25. 6 . 1968 இல் பிறந்தவர்.

சீனிவாச கவுண்டர்- ஆயி அம்மாள் ஆகியோரின் மகன் வயிற்று பேரனும் துரைசாமி கவுண்டர்- பூத்தான அம்மாள் ஆகியோரின் மகள் வயிற்றுப் பேரனும் ராஜவேல் கவுண்டர் மணி அம்மாள் ஆகியோரின் புதல்வரும் ஆவார் இவர்.

ஒண்ணுபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் வேலூர் ஊரிசு கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கிய படிப்பும் சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம், ஆய்வியல் நிறைஞர் படிப்பும் பயின்றவர்.

சென்னையில் அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்.

உனக்குப் பிறகான நாட்களில், கல்லால மரம் , மழை பூத்த முந்தானை, வேட்கையில் எரியும் பெருங்காடு, ஆகிய கவிதை நூல்களும் பாரதியின் புதுவை வாழ்க்கை, தும்பிகள் மரணமுறும் காலம், மண்ணில் எங்கும் நீரோட்டம் என்ற கட்டுரை நூல்களும் தம்பி நான் ஏது செய்வேனடா என்ற நேர்காணல் நூலும் எழுதியவர்.

கவிஞர் சிற்பி விருது, எஸ்பிஐ விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, ஏர்வாடி ராதாகிருஷ்ணன் கவிதை உறவு விருது, ஆகிய விருதுகளை கவிதை நூல்களுக்காக பெற்றவர்.

வீரப்பன் கதையான சந்தனக்காடு என்ற தொலைக்காட்சி தொடருக்கும் ஈழம் என்ற தொலைக்காட்சித் தொடருக்கும் தலைப்பு பாடல் எழுதியவர். மகிழ்ச்சி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதியுள்ளார் .

பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களுக்கு பாடல் எழுதியுள்ளார் .

ஏரி, மலை , பனை, பூ என்ற கவிதைகளை குறும்படமாக ஆக்கியுள்ளார்.