பெயர் :மு.பாலமுருகன் புனைப்பெயர் :கவிபாலாதமிழ் பிறப்பு :01-04-1996 தாயார் :ராதாமணி (லேட்) தந்தையார்: முத்துச்சாமி பிறந்த ஊர் :ஈரோடு வசிக்கும் ஊர் : ஈரோடுமாவட்டம் பவானிவட்டம் காளிங்கராயன் பாளையம். அஞ்சல் குறியீடு :638301. வாழ்க்கைத்துணைவி : ஸ்ரீநித்யா மகன் : தமிழினியன்.

   வணக்கம்! நான் கவிபாலாதமிழ் எழுதுகிறேன். எனக்கு பொழுது போக்கு கவி சிலையை வடித்துக் கொண்டிருப்பது.



*பொள்ளாச்சி கழுகுகள்*

----------------------------

அலைந்து திரிந்த

நகரக் காட்டில்

ஓய்வுக்காய்

கொத்தி தின்னுகிறது

பெண் என்னும்

தின்பண்டமாய்

ஆண் பிணம்

தின்னிக் கழுகுகள்....

மெல்லிய இதழை

குதறி தள்ளும்

இந்த தெருநாய்களின்

தாகங்கள்

ஏழை பெண்ணின்

கண்ணீரைப்

பருகி தான்

தீர வேண்டுமா?....

இதில் தான்

நிரூபிக்கப்பட

வேண்டுமா?

பண முதலைகளின்

இறைக்கு

பஞ்சணையில்

பாமர பெண்ணா?...

சமூகம் ஈனம் கெட

சட்டம் திருத்தப்பட

வேண்டாம் இனி

சட்டமே வேண்டாம்

நாங்களே தந்து

விடுகிறோம்

பழங்கால தண்டனைகளை!...

*பெண்ணை வாழவிடு கதறலின் கட்டுக்குள் கட்டுப்படுத்தாதே*

ஆணே!

பெண்ணிற்கு இனி பாதுகாப்பாய்

இரு.

*கவிபாலாதமிழ்*

மூன்றரை ஆண்டுகள் பின்னோக்கி நகர்தலில் கெஞ்சலும் கொஞ்சம் கண்ணீரும் தான் மிச்சமாகியிருக்கின்றன. கவலை பள்ளத்தாக்கில் வீசி உதட்டில் பொன்முறுவலை செதுக்கி முன்னோக்கி கால் நடக்க அரங்கேற்ற வேலைகளை ஆரம்பித்து பிறந்தது தான் என் கவிதை நூல் "*அகம்நகல்*" 2019-ல் வெளியிடப்பட்டது. மூன்று ஆண்டுகள் தனியார் கல்லூரி நிறுவனத்தில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகப் பணி புரிந்து வந்தேன். அப்பா அம்மா இல்லையென்றாலும் சாதிக்கும் வெறி இதயக் கிணற்றில் ஊறிக்கொண்டே இருந்தது என்னுள்.....

தற்போது "தூங்காத இரவுகள்" என்னும் கவிதை நூலை நெய்ய தொடங்கி அச்சேற்றத்திற்கும் அரங்கேற்றத்திற்கும் நகர்ந்து கொண்டிருக்கிறது.....
 
 இலக்கியம், இலக்கணம், கவிதை, இசை,என பன்முக நாட்டம் இருப்பினும் தமிழே எமக்கும் உயிரூட்டிய தருணங்களை ஒருபோதும் நான் மறவேன்.
 தமிழா!.... அது எதுக்கு எடுத்து படிச்ச என்ற கேள்விகள் தான் இன்னும் என்னை ஆவேசப்படுத்தி மனதால் ஒன்றிணைந்து உருவாகி இன்று கவித்துறையில் 20-க்கும் மேற்பட்ட விருதுகளும் சான்றிதழ்களும் பெற்றுள்ளேன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கவிதையின்பாலும் தமிழின்பாலும் பாலா *கவிபாலாதமிழ்* ஆகினேன்.

பெற்ற விருதுகள்;

     1.முத்தமிழ்க்காவலன் விருது
     2.இளம்பாரதி விருது (டாக்டர் 
       கிரண்பேடி -ஆளுநர் ராஜ்நிவாஸ் 
       திருக்கரத்தால் பெற்றது)
     3.தாய்மொழிச் செம்மல் விருது (கரூர் 
       மாவட்டத்தில் முன்னாள் தமிழகப் 
       போக்கு வரத்து அமைச்சர் 
       எம்.ஆர்.விஜயபாஸ்கர் 
       திருக்கரத்தால் பெற்றது)
     4.நாமக்கல் கவிஞர் விருது
     5.குறள்செம்மல் விருது
     6.தமிழறிஞர் அண்ணா விருது
     7.உவமைக்கவிஞர் சுரதா விருது
     8.கவிநயம் விடிவெள்ளி விருது 
       (அண்மையில் பெற்றது -2023)
     9.ஆளுமைக்கவிச் செம்மல் 
       விருது(2020)
    10.கவிச் சிற்பி காந்தி விருது (2020)
    11.Kalam Wings Award (2020)
    12.காவிய நாயகன் விருது
    13.கலைஞரின் செம்மொழி விருது
  இதுபோன்ற பல விருதும் Impact foundation - நடாத்திய இணைய வழியில் பேச்சாளர் பயிற்சி இரண்டு மூன்று மாதம் எடுத்துக்கொண்டு "Qualified public speaker" என்ற சான்றிதழையும் பெற்றுள்ளேன்.
   பயின்ற கல்லூரியிலேயே சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்று பாரதியார் பல்கலைக்கழக முனைவர் பட்ட விரிவாக்க மையத்தில் "புதுக்கவிதை ஓர் அறிமுகம்" எனும் பொருண்மையில் பங்கேற்று சிறப்புரையாற்றியுள்ளேன்.'ஆய்வியல் அறிஞர்' என்ற பெயரும் பெற்றேன். தமிழ் மீது இருக்கும் தீராத காதலால் வாங்கும் வருமானத்தில் கவிதை நூல் வாங்கும் பழக்கமும் என்னுடன் பழகிபோய்விட்டது.

நா.முத்துக்குமாரால் ஈர்க்கப்பட்டு பாடல்கள் கவிதைகள் என என்னையே தர துவங்கிவிட்டேன்.

வலையொளி இணைப்பு:https://youtube.com/@kavibalamediapresent2317

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கவிபாலாதமிழ்&oldid=3732839" இலிருந்து மீள்விக்கப்பட்டது