கா.சுப்ரமணியன், ஈரோடு மாவட்டம் நகலூரில் 27.2.1955-ல் பிறந்தவர். பிரமிள் கவிதைகளை ஆய்வுசெய்து டாக்டர் பட்டம் பெற்ற இவர், தற்போது கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர், பத்திரிக்கையாசிரியர். பிரமிளின் நெருங்கிய நண்பராகவும் ஆய்வாளராகவும் வெளியீட்டாளராகவும் விளங்கிய கால சுப்ரமணியம், தமது லயம் பத்திரிகையில் 1985-லிருந்து பிரமிளின் படைப்பியக்கத்திற்குக் களம் அமைத்துத் தந்தார். லயம் வெளியீடுகளாக அவரது நூல்களைப் பதிப்பித்தார். பிரமிளின் மறைவுக்குப் பிறகு, அவரது அனைத்து எழுத்துகளையும் (16 தொகுதிகளாக) திரட்டிப் பிரசுரித்து வருகிறார். தற்போது, எதிர்முனை இதழின் சிறப்பாசிரியர். கால சுப்ரமணியத்தின் பிற நூல்கள் : 1. மேலே சில பறவைகள் (கவிதைத் தொகுதி), லயம், 1995. 2. சங்கேதங்களும் குறியீடுகளும்: மேலைநாட்டுச் சிறுகதைகள் (தமிழாக்கம்), குருத்து, 2008. 3. சாத்தானுக்குப் பிரார்த்தனை விண்ணப்பங்கள் (தமிழாக்கக் கவிதைகள்), நற்றிணை, 2011. 4. விண்மீன்: அறிவியல் புனைகதைகள் (தமிழாக்கம்), தமிழினி, 2012. 5. உலகம் நீதான், ஜே.கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்), தமிழினி, 2012.

  முகவரி: கா.சுப்ரமணியன், 155, கிழக்குவீதி, நேருநகர், சத்தியமங்கலம்-638402. Cell:9442680619, 9976196514. email: kasu.layam@gmail.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கால_சுப்ரமணியம்&oldid=1011556" இலிருந்து மீள்விக்கப்பட்டது