மண் வளம் ^^^^^^^^^^^^^^ பூமித்தாயின் போர்வையே மண். மண் இருப்பதாலேயே மரங்கள் , செடிகள் மற்றும் கொடிகள் வேரூன்றி வாழ்கின்றன. மண் வேரை இறுகப் பிடித்து இருப்பதால் தான் தாவரங்கள் நேராக நிற்கின்றன. மழை , வெள்ளம் காரணமாக மண்ணானது இடம் விட்டு இடம் பெயர துவங்குவதால் மண்ணரிப்பு ஏற்படுகிறது. தாவரங்கள் அடர்ந்த இடங்களில் வேர்கள் வளமான மண்ணை இறுக பற்றி இருப்பதால் அங்கு மண்ணரிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் , மனிதர்கள் மரங்களை வெட்டி விடுவதால் , அவ்விடங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு வளமான மண் வெளியேறி விடுகின்றது. மண் வளம் குன்றும் போது நாட்டின் வளமும் குன்றுகிறது.           இதைத் தான் அக்காலத்தில் ஆத்திச்சூடி பாடிய ஔவையார் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் அரசனின் பிறந்தநாளில் அவ்வரசனை “வரப்புயர” என்று வாழ்த்த, அதன் பொருள் விளங்காத அரசனும் சபையோரும் ‘வரப்புயர’ என்றால் என்ன? என வினவினர். அதற்கு ஔவையார் 

“வரப்புயர நீருயரும்

நீருயர நெல்லுயரும்

நெல்லுயர குடியுயரும்

குடியுயர கோன் உயருவான்” 

என்றார். வயலின் வரப்பு உயர்ந்தால் அதாவது மண் அரிக்கப்படாமல் இருந்தால் அதில் தேங்கி நிற்கும் நீரின் உயரம் கூடும். நீரின் வளம் கூடினால் வயலில் விளைச்சல் கூடும். விளைச்சல் கூடுதலாக இருந்தால் நாட்டின் பொருளாதாரம் பெருகி, மக்களின் வாழ்க்கை உயரும். நாட்டில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர உயர நாட்டை அரசாட்சி செய்யும் மன்னனும் புகழால் உயர்வடைவான்’ என்பதே ‘வரப்புயர’ என்று ஔவை வாழ்த்தியதன் பொருளாகும். மழை வரவும் மரங்கள் வேண்டும். மண்ணரிப்பைத் தடுக்கவும் மரங்கள் வேண்டும். மண் வளத்தைக் காக்க வேண்டுமென்ற விழிப்புணர்வை உலகமெல்லாம் ஏற்படுத்து ஐ.நா., உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இயக்குனர் ஜோஸ் கிராசியானோ டாசில்வா 2015ஆம் ஆண்டை ‘உலக மண்வள ஆண்டு’ என அறிவித்துள்ளார். மண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 2002 முதல் டிச.,5 ம் நாள் ‘உலக மண் தினம்’  கொண்டாடப்பட்டு வருகிறது.    ஓர் அங்குலம் கனமுடைய மண் உருவாக குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் ஆவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஒரு கைப்பிடி அளவுள்ள மண்ணில் 45 சதவீதம் கனிமப்பொருட்களும், 25 சதவீதம் நீரும் , 25 சதவீதம் காற்றும், 5 சதவீதம் நுண்ணுயிரிகளும் உள்ளன.    

       

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:குமாரி_எலிசபெத்_ஜோ&oldid=2289655" இலிருந்து மீள்விக்கப்பட்டது