http://kavihaigal0510.com ஆசிரியர்  தமிழக அரசு பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் பணிபுரிந்து 31-12-2013-ம் ஆண்டில் ஓய்வு பெற்றவர்.   நூலாசிரியரின் இளவல் திரு இரவியின் ” மௌனம்” கையெழுத்து பிரதியில் 1982-ல் ஆரம்பித்த எழுத்து பணி…. தாய்மண் இலக்கிய கழகம், உரத்தசிந்தனை, கடற்கரை கவியரங்கம்… சோவியத் பண்பாட்டு கழகத்தின் புஷ்கின் இலக்கிய பேரவை போன்ற  பல்வேறு இலக்கிய அமைப்புகளில் தொடர்ந்து, கவிதைகள் வழங்கி… பரிசுகளும்… பாராட்டு சான்றுகளும் பெற்றுள்ளார்.

                                   அமுதசுரபி, கல்கி, பாக்யா, கலைமகள் மற்றும் சிற்றிதழ்கள் பலவற்றில் மரபு கவிதை மற்றும் புதுக்கவிதைகள் வெளியாகி உள்ளன.

          நமது நம்பிக்கை, வளா்தொழில், நமது தொழில் உலகம், ஆளுமைச் சிற்பி, குங்குமம் மற்றும் புதிய சுற்றுச்சுழல்கல்வி அகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி உள்ளன.. ஊக்கப்படுத்தி வரும் அனைத்து பத்திரிகை ஆசிரியர்களுக்கும் மனதார நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்

                                     பல்வேறு இதழ்களில்   வெளியான சிறுகதைகளை ஒருங்கிணைத்து, நூலாக வெளியிட ஆர்வம் மேலிட்டு… அனுராக பதிப்பகத்தாரை அணுக… ஆர்வத்தினை… ஆர்வமாக நிறைவு செய்தமைக்கு  அனுராக பதிப்பகத்தின் தலைமைப் பொறுப்பாளர் திரு. நந்தன் மாசிலாமணி அவர்களுக்கு மனதார நன்றியினை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

                                   மேலும் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் சிந்தனை சிகரம் விருதும் தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழும ம் தொடர்ந்து விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது.                                                                                                            

    http://kavihaigal0510.com  வலைத்தளத்தில் கவிதைகள் கட்டுரைகள் நூல் நயம் மற்றும் பயனுள்ள தகவல்கள் பதிவிடப்பட்டு வருகிறது. வாசகர்களின் கருத்தினையும் ஆதரவையும் அன்புடன் எதிர்நோக்குகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கே._அசோகன்&oldid=2563795" இலிருந்து மீள்விக்கப்பட்டது