பயனர்:கே. அசோகன்/மணல்தொட்டி

தனித்துவம் – கட்டுரை

                        நமது சமுதாயத்தில், முன்பெல்லாம் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தபோது, குடும்ப தலைவரின் பொறுப்பில், எத்தனைப் பிள்ளைகள் இருந்தாலும்,  திருமணமானபின்னும் ஓரே வீட்டில்  குடும்பம் நடத்தினார்கள்.

                        அப்பொழுதெல்லாம், தனித்துவம் என்பது குடும்ப தலைவரின் தனித்துவம் என்னவோ, அதைச் சார்ந்தே மற்றவர்களின் தனித்துவமும் வெளிப்படும்.

                        காலப்போக்கில், கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து, தனிக்குடும்பங்கள் உருவாகின. அப்போதுதான், தனித்துவத்தை தனியாக பிரித்து பார்க்க தலைப்பட்டனர்.

                        அங்கிருந்துதான், சமுதாயத்தில் நன்மைகளும், தீமைகளும் கலந்தே பெருக துவங்கின. கூட்டுக்குடும்பத்தில் பொறுப்பில்லாத நபர், தனிக்குடும்ப சூழலில் பொறுப்புள்ள நபராக மாறுகிறார். தனது குடும்பத்திற்கான தனித்துவத்தை நிறுவப் பார்க்கிறார். கடமைகளை நிறைவேற்ற அதனைப் பயன்படுத்துகிறார். அத்தோடு, தன்னலம்  என்ற வட்டத்திற்குள்ளும் சிக்கி கொள்கிறார்.

                          நல்ல படிப்பு, அதற்கான வேலை வாய்ப்பு தேடி முன்னேற்றி அவரின் தனித்துவத்தாலேயே வளர்ந்தும் விடுகிறார். தனிக்குடும்ப தலைவர்,  என்ன மனப்பான்மையில் தன் வாரிசுகளை வளர்க்கிறாரோ, அதன் பாதிப்புகள்தான் எதிர்காலத்தில் அவர்களின் வாரிசுகளுக்கும் தாக்கமாக நிலைத்திடும்.

                        கூட்டுக்குடும்பத்தில் குடும்ப தலைவரின் வார்த்தைக்கு முக்கியத்துவமும், மரியாதையும் அதிகமாக இருந்த்து. காலப்போக்கில், தனி குடும்பமாக மாறியபோது, சுதந்திர மனப்பான்மையும், சுயநலமும் கூடிப்போனதில் வியப்பு ஏதுமில்லை.  கட்டுப்பாடுகள் காற்றில் பறந்தன.  நாகரிகத்திற்கேற்ப அவரவர் சுதந்திரம், அவரவர் எண்ணங்கள் அதற்கேற்பவே நடை உடை பாவனைகள் அமைந்தன.                       

             இந்த மனோபாவமே, இன்றைய தலைமுறையினரிடையே, வயதில் முதிர்ந்தவர்களுக்கு மரியாதை தருவது குறைந்து போய், முதியவர்களை விட தமக்கு நிறையவே தெரியும் என்ற  மனப்பான்மை வந்து விட்டது. அப்படியே யாராவது பெரியவர் ஒருவர் அறிவுரை கூறினால், உங்களுக்கு ஒன்றும் தெரியாது, எங்களிடம் அறிவியல் கண்டுபிடிப்புகளான கணிணி, ஊடகங்கள், பொது ஊடகங்கள் என பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன. அவற்றின்வழியே நாங்கள் கற்றுக் கொள்கிறோம்.

                        உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் என்று உதாசீனப்படுத்தி விடுகிறார்கள்.  அறுபது வயது முதியவருக்கு தெரியாத அலைபேசி தொழில்நுட்பங்கள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தெரிந்து கொள்கிறது. ”என்ன தாத்தா நீ, இதுகூட தெரியலையா ? ” என்று கேள்வி வேறு கேட்கிறது. குழந்தையிடம் கோபிக்க முடியுமா ?

                        தற்போது, பொது இடங்களில் வயது பெண்கள் அத்துமீறி, ஆண்நண்பர்களின் தோளில்சாய்ந்து  கொஞ்சுவதும், காதல்மொழிகளைப் பேசுவதமாய் இருக்கின்றனர். கேட்டால், தங்கள் சுதந்திரமென்றும், தனித்துவம் என்று அலட்சியப்படுத்தி விடுவார்கள். இவர்களின் இப்போதைய தனித்துவம், எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று யோசித்தால்….?

                                    அறிவியல் முன்னேற்றங்கள் நிகழ்ந்து, பள்ளிகளுக்கு செல்லாமலேயே, சிறு வயதிலேயே அலுவலக வேலைக்கு சென்று சுயமாக சம்பாதிக்கும் சந்ததியர் உருவாகும் சூழலும் நிகழும். அப்பொது, அந்த சந்த்தியர்கள், இப்போதைய இளைய சமுதாயத்தினர், அப்போது முதியவர்களாக இருப்பார்கள். அவர்களை  ”நீ யார் என்னைக் கட்டுப்படுத்துவது, எனக்கு எல்லாம் தெரியும்” என்று ஏகவசனத்தில் பேசினால் சகித்து கொள்வார்களா ? அப்போது புலம்பமாட்டார்கள். காலம் கெட்டுவிட்டதென்று…?

                                    தனித்துவம் இல்லாமல் மிளிரமுடியாது. தனித்துவம் வேண்டாமென்று சொல்லவில்லை. தொழிலில் தனித்துவம் காட்டுங்கள். படைப்பாற்றலில் தனித்துவம் காட்டுங்கள், அறிவில் தனித்துவம் காட்டுங்கள். பொது சமுதாயத்தில் முதிர்ந்தவர்களுக்கு மரியாதை தருவதில் அலட்சியமாய் இருப்பதை தனித்துவமாக எண்ணாதீர்கள், அப்போதுதான் நடைமுறை சிக்கல்களும், தலைமுறை இடைவெளிகளும் சமன்செய்யப்படும் என்றே தோன்றுகிறது.

                                                                                                            --- கே.. அசோகன்.