தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிகரையில் அமைந்துள்ளது ஊர்காடு என்ற அழகிய கிராமம்.இங்கு வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு கோட்டிலிங்க சுவாமி,கோட்டிலிங்கபெருமான், கோட்டிபிரிசுவாமி என்று பெயர் வழக்கில் உள்ளது.அதற்கு காரணம் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருகல்யாண வைபோகம் நடக்கவிருக்கும் தருணத்தில் மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவியர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் திருக்கல்யாணத்திற்கு கூடிய போது பாரம் தாங்காமல் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து தென் பொதிகை மலை உருவாகி அங்கிருந்த நீரூற்று பள்ளத்தை நோக்கி பாய்ந்தது அதுவே தாமிரபரணி ஆறு என்று பெயர் பெற்றது.தென்திசை உயர்ந்தும் வடதிசை தாழ்ந்து போனதால் இந்த உலகத்தை சமநிலை படுத்துவதற்காக இறைவன் சிவபெருமான் அகத்தியரை அனுப்பி வைத்தார்.அகத்தியருக்கோ தென்திசை நோக்கி செல்லும் போது வழிதெரியவில்லை ஆறு ஓடுவதை கண்ட மாமுனிவர் அகத்தியர் ஆறு ஓடும் கரை வழியாக நடந்து சென்றார்.அந்தி சாயும் நேரம் ஆகிவிட்டதால் ஆண்டவராகிய சிவபெருமானை நினைத்து தாமிரபரணி நதிக்கரையில் மணலால் ஒரு சிவலிங்கத்தை உருபிடித்தார் ஆனால் லிங்கமோ உடைந்து விழுந்தது.மீண்டும் பலமுறை நமச்சிவாய மந்திரம் ஜெபித்து லிங்கத்தை உருபிடித்தார்.ஆனால் அகத்தியரை கோட்டிபிடிக்கும்படி சோதித்தார்.கோபமடைந்த அகத்தியர் மகாதேவா என்னை கோபத்தை ஏற்படுத்தி கோட்டிபிடிக்கும்படி செய்ததால் உனக்கு கோட்டிலிங்கம் என்றும் இந்த லிங்கத்தை பிரிந்து செல்வதால் உனக்கு கோட்டிபிரிசுவாமி என்றும் நீ மாட்டை வாகனமாக கொண்டதால் கோட்டிபிரிமாடன் என்றும் இன்றுமுதல் உன்னை கோட்டி கோட்டி என்று பக்தர்கள் அழைக்கட்டும்... இந்த இடத்தில் ஒரு சமஸ்தானம் உருவாகி அழிந்த பிறகு சமஸ்தானத்தில் பிறந்தவர்களுக்கும் பணிபுரிந்தவர்களுக்கும் குலதெய்வமாக விளங்குவாய் என சாபமிட்டார். அதன்படி ஐயனுக்கு கோட்டிபிரிமாடன்,கோட்டிலிங்கபெருமாள்,கோட்டிலிங்கசுவாமி என்று பெயரிட்டு தங்கள் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.ஊர்காட்டு ஜமினின் கடைசி அரசர் சேதுராயபூபதி தன் அரண்மனையில் பணிபுந்தவர்களுக்கு இறக்கும் தருவாயில் பொன், பொருள்,நிலம் முதலானவை களை தானம் செய்ததோடு. தன் குல தெய்வமான கோட்டிலிங்கசுவாமியையும் சிவகாமி அம்பாளையும் தானமாக கொடுத்தார். சேதுராயபூபதியின் வேண்டுதலுக்கு செவிகொடுத்த கோட்டிலிங்கசாமி அரண்மனை பணியாளர்களான பள்ளத்தில் பயிர் செய்த உழவர்களுக்கு குலதெய்வமாக பல சிறு கிராமங்களில் இன்றளவும் வணங்கப்பட்டு வருகிறது.குதிரையை வாகனமாகவும்,வீச்சருவாள் வேல் கம்பு,பிரம்பு,தீப்பந்தம் முதலான ஆயுதங்களோடும் கோட்டிபிரிமாடசாமி,கோட்டிலிங்கசாமி,கோட்டிலிங்கபெருமாள் என்ற பெயர்களோடு கிராம தெய்வமாக வழிபாடு செய்யப்படுகிறது.சிவகாமி அம்பாளோடும், ஈஸ்வரி அம்பாளோடும்,முண்டசாமி, வண்ணார் மாடசாமி, வண்ணார் மாடத்தி அம்மனோடும் பல கிராமங்களில் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.