[1]பெயர் : சங்கை ரிதுவான் தந்தை பெயர் : முஹம்மது இலியாஸ் முகவரி : சங்கரன் பந்தல் மாவட்டம் : நாகப்பட்டிணம்

சங்கை ரிதுவான் எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர்

எழுத்தாளர் :

சங்கை ரிதுவான் தம்முடைய சொந்த பெயரில் சமூக வலைத்தளமான முகநூலில் சங்கை ரிதுவான் மற்றும் சங்கை ரிதுவான் (பக்கம்) ஆகிய முகநூல் பக்கங்களின் வாயிலாக தமிழகத்தில் சமூக அமைதிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் தம்முடைய எழுத்துக்களால் விதை விதைத்தார். சமூக அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் பாசிஸ சிந்தனையாளர்களை தமிழக மக்கள் மத்தியில் தோலுரித்தார்.

அவரது பதிவுகளின் துவக்கமாக...

எங்களோடு அண்ணன் தம்பிகளாவும், மாமன் மச்சான்களாகவும் வாழ்ந்து வரும் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளான இந்து கிறித்தவ சொந்தங்களே என்று தான் தொடங்குவார்...

தமிழக முஸ்லிம்களிடம் மீடியா பற்றிய தாக்கத்தை ஏற்படுத்தினார், மீடியா இருந்தால் தான் சமுதாயத்தின் குரல்கள் வெளியுலகில் ஒலிக்கும் என்பதை இடைவிடாத பிரச்சாரத்தின் வாயிலாக கொண்டு சென்றார். அரை நிர்வாண ஆடைகளுடன் தொப்புளை காட்டும் நடிகைகளுக்கு முதல் பக்கத்தில் செய்தி வெளியிடும் ஊடகங்கள் முஸ்லிம்களின் குரல்களை வெளிப்படுத்தவில்லை என்று முஸ்லிம் சமுதாய இளைஞர்களுக்கு மீடியா பற்றிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

வஞ்சிக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயமான முஸ்லிம்களின் குரல்கள் ஊடகங்களில் ஒலிக்க வேண்டும் என்றால் முஸ்லிம்கள் மீடியாவில் கால் பதிக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது.

சங்கை ரிதுவான் தம்முடைய எழுத்துக்களின் மூலமாக 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாசகர்களை தன் வசம் ஈர்த்தார். அவரது பயணம் சமூக அமைதிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்காக அரும்பாடு பட்டார்.

சமூக ஆர்வலர் :

  1. சங்கை ரிதுவான்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சங்கை_ரிதுவான்&oldid=1787861" இலிருந்து மீள்விக்கப்பட்டது