முனைவர் சி. சதானந்தன் அவர்கள் 19.01.1980 ஆம் ஆண்டு அப்போதைய வேலூர் மாவட்டம் தற்போதைய இராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி ஒன்றியத்தில் பனப்பாக்கம் என்னும் ஊரில் திரு.ச.க.சின்னப்பையன் திருமதி சி.பார்வதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப் படிப்பைப் பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் நிறைவு செய்தார். இளங்கலைத்தமிழ் (B.Lit), முதுகலைத் தமிழ் (M.A), ஆய்வியல் நிறைஞர் (M.Phil.,) தமிழ், முனைவர் பட்டம் (Ph.D.,) ஆகியனவற்றைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார். ஆய்வியல் நிறைஞர் படிப்பில் சென்னைப் பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசிரியர் முனைவர் மு.பொன்னுசாமி அவர்களின் நெறிமையின் கீழ் “காவேரிப்பாக்கம் வட்டாரச் சிறுதெய்வ வழிபாடு” எனும் தலைப்பில் ஆய்வு செய்தார். முனைவர் பட்டப் பேற்றிற்காக, சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் இரா.கண்ணன் அவர்களின் நெறிமையின் கீழ் “பாட்டியல் நூல்கள் - ஓராய்வு” எனும் தலைப்பில் ஆய்வு செய்தார். இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரை அளித்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சதானந்தன்&oldid=3296355" இலிருந்து மீள்விக்கப்பட்டது