சந்தோஷ் வாணிய
வாணியர் குல அன்பிற்பிரியாள் அம்மன் வரலாறு
நம் சொந்தங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக
#அன்புபிரியாள்அம்மன் வரலாறு
மருதவாணிபன் என்னும் பெருவணிகன் காவிரிபூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்தான்.அவனுக்கு பிள்ளைப்பேறு இல்லை.ஆகையால் அவன் சான்றோருக்கும், ஏழைகளுக்கும் தானங்கள் பல செய்து வந்தான்.அதனைக் கண்ட பார்வதி தேவி சிவனிடம் உங்களையே அனுதினமும் நினைத்துக்கொண்டிருக்கும் மருதவாணிபருக்கு புத்திரபாக்கியம் கிடைக்க அருள் செய்யுமாறு வேண்டினாள். அதற்கு ஈசன் இவருக்கு புத்திரபாக்கியம் இல்லை என்று கூறினார். அதற்கு பார்வதிதேவியோ நம் ஆலயத்திற்கு எண்ணெய் தரும் வாணியர்களாகிய இவர்களுக்கு புத்திரபாக்கியம் தராவிட்டால் உலகம் நம்மை பலிக்கும் என்றாள். உடனே ஈசனும் சரி நீயே இவர்களுக்கு குழந்தையாக பிறந்து என்னை வந்து அடைவாயாக! என்று அருளினார்.
இதன் பயனாக பார்வதிதேவியின் அம்சத்துடன் மருதவாணிபருக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.அக்குழந்தைக்கு அன்புபிரியாள் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அக்குழந்தையும் அழகான பெண்ணாக வளர்ந்து பருவமடைந்தாள். அந்நாட்டு சோழஅரசன் நகர்வலம் வந்த போது அவள் அழகில் மயங்கி அவளை மணம் செய்ய எண்ணினான்.
இதற்கிடையே இறைவனே தொண்டைநாட்டு வாணிகன் வேடத்தில் வந்து அன்புபிரியாள் அம்மையை தானே திருமணம் செய்ய எண்ணுவதாய் கூறினான். மருதவாணிபரும் சரி என்று ஒப்புக் கொண்டார்.திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணநாளும் நிச்சயம் செய்யப் பட்டது.
இவ்விஷயம் சோழமன்னனுக்கு தெரிந்தது.உடனே அவன் தன் ஆட்களை அனுப்பி மருதவாணிபரிடம் பெண் கேட்டான். ஆனால் மருதவாணிபரோ நாங்கள் செத்தாலும் சாவோமே தவிர மாற்று இனத்தவருக்கு பெண் கொடுக்க மாட்டோம் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார். இதனை கேட்ட அரசன் கடுங்கோபமுற்றான்.
உடனே அரசன் தன் வேலையாட்களை அனுப்பி மருதவாணிபர் வீட்டை அலங்கரிக்க சொல்லி நாளை காலை எனக்கும் அன்புபிரியாளுக்கும் திருமணம் நடக்கும் என்று கூறினான்.
இதை கண்ட மருதவாணிபரோ பதறிப்போனார். வேறொருவருக்கு பெண் தருவதாய் நாம் கொடுத்த வாக்கு என்னாவது என்று எண்ணினார். சொன்ன சொல் தவறாத வாணியர் குலத்தில் பிறந்து விட்டு அரசனுக்கு எப்படி பெண் கொடுப்பேன் என்று பதறினார்.
அன்றிரவே அவர் அரசன் திருமணத்திற்காக கட்டியிருந்த மணப்பந்தலில் ஒரு நாயைக்கட்டி விட்டு தன் மகளுடனும் தன் உறவினர்களுடனும் தன் மகளுக்கு நிச்சயித்த மருமகன் ஊருக்கு சென்றார். அப்போது அவர்கள் செல்லும் வழியில் ஈசன் மணமகன் வேடத்தில் வந்தார். உடனே அவர்கள் இப்போதே திருமணத்தை நடத்தி விடலாம் என்று எண்ணி திருமணத்தை முடித்து விட்டனர். அனைவரும் கிளம்பும் போது காவிரிஆறு குறுக்கிட்டது. அனைவரும் ஒரு ஓடத்தில் ஏறி அக்கரையை அடைந்தனர். அப்போது அன்புபிரியாளையும் மருமகனையும் காணாது தவித்த மருதவாணிபர் ஆற்றில் குதித்து உயிரை விட முடிவுசெய்தார். அப்போது மருதவாணிபா "யாமே உமது மகளை ஆட்கொண்டோம்" எம்மை காண நீ திருவிடைமருதூர் வருவாயாக! என்ற அசரீரி குரல் கேட்டது.
திருவிடைமருதூரை அடைந்த மருதவாணிபரும் உறவினர்களும் அன்புபிரியாள்அம்மையும். ஈசனும் மணக்கோலத்தில் இருப்பதை கண்டனர். ஈசன் தான் அன்புபிரியாளை மணந்த முறையை கூறி மறைந்தார்.
காவிரிப்பூம்பட்டினத்தில் அரசனோ மணப்பந்தலில் நாயைக் கண்டு கடுங்கோபம் கொண்டான். அங்கிருந்த வாணியர் குலத்தவர்களை அடித்து சித்திரவதை செய்தான். இதைக் கண்டு பயந்த வணிகர்கள் அரசனிடம் அவர்களை நாங்கள் பிடித்து தருகிறோம் என்று கூறி செல்வாக்குடன் வாழ்ந்தனர்.
பல ஆண்டுகளுக்கு பின் அவர்கள் திருவிடைமருதூர் ஆலயத்தில் அன்புபிரியாள் அம்மை திருமண உற்சவத்தை தாங்களே நடத்த தகுதியானவர்கள் என்று அரசனிடம் சென்று முறையிட்டனர். மருதவாணிபனின் உறவினர்களும் தங்களுக்கு தான் உரிமை இருப்பதாய் கூறினார்கள். அரசனும் இருபிரிவினரும் திருவிடைமருதூர் சென்று அன்புபிரியாளம்மை முன் சென்று கூப்பிடுங்கள்.யார் அழைத்தால் வருகிறாளோ அவர்களே உரிமை உடையவர்கள் என்று கூறினான்.
அதன்படி இருசாராரும் கோவிலுக்கு சென்று அழைத்தனர்.மருதவாணிபர் உறவினர்கள் அழைத்த போது என்ன அப்பா என்ன அம்மா என்று குரல் வந்தது.உடனே அரசன் திருக்கல்யாண உற்சவம் நடத்த நீங்கள் தான் உரிமை உடையவர்கள் என்று சாசளம் வழங்கி சிறப்பித்தான்.இப்போதும் 4 ஆம் நாள் மாப்பிள்ளை அழைப்பு மண்டகப்படி நம் வாணியர் சமுதாயத்தவரால் நடத்தப்படுகிறது.
அப்போது முதல் திருவிடைமருதூரில் திருக்கல்யாண உற்சவத்தை நம் சமூகத்தினரே நடத்தி வருகின்றனர்.இன்றும் திருவிடைமருதூர் இறைவன் பக்கத்தில் எண்ணெய் குடம் இருப்பதை காணலாம்.
இதிலிருந்து நம் வாணியர்கள் சொன்னசொல் தவற மாட்டார்கள் என்பதும் மாற்று இனத்தவருக்கு பெண் தரமாட்டார்கள் என்பதும் நிரூபணம் ஆகிறது.
#வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டியது படித்துவிட்டு #பகிரவும்.....
என்றும் சமுதாய பணியில்
-J.K .சந்தோஷ் வாணியன்