பயனர்:சமூக மாற்றம்/மணல்தொட்டி

                    சமூக மாற்றம்

கல்வி: தாய் விழி வழியிலான தரமான சுய மதிப்பீடு,தர மதிப்பீடு,நன்னடத்தை மற்றும் நமது பாரம்பரிய தொன்மையான விடையங்களை உள்ளடக்கி அக ஒழுக்கத்தினையும்,செம்மாந்து வாழும் பண்பாட்டு மரபு செழிப்புகளை உள்ளடக்கமாக கொண்ட,சுய சிந்தனையையும்,பகுத்தறிவையும்,கட்டுப்பாடான வாழ்வியலை பயிற்றுவிக்கும் கல்வி முறை அமைய வேண்டும்.இவைகள் அனைத்தும் ஆரம்ப தொடக்க நிலை முதலே மனதில் ஆழமாக வேரூன்றும்படியாக அமைந்து செய்வித்தல் வேண்டும்.ஆயக்கலைகளை செய்முறை செய்வித்தலுடன் பயிற்றுவித்தல்.அன்பு,வீரம்,அடக்கம்,எளிமை,பணிவு,ஆளுமைப்பண்பு ஆகியவற்றினை வளர்த்தெடுக்கும் கதர் ஆடைகளையே எத்தருணமும் அணிந்து கொள்ள கல்வி ரீதியாகவும் களத்திலும்,தளத்திலும் பயிற்றுவித்தல்.,அவற்றினை செயல்படுத்துதல் பள்ளிகள் கல்லூரிகள்,பல்கலைகழகங்களில் இச்சீருடைகளையே அணிய செய்துபாரம்பரிய அடையாளத்தினை பதிவ்ய வைத்தல்.மேலும் முதல் நிலை ஆரம்ப தொடக்க நிலை பள்ளிப்பருவத்திலேயே,நமது பாரம்பரிய கலாச்சார வாழ்வியல் சூழலிற்க்கான நடைமுறை பழக்கவழக்கங்களை பயிற்றுவித்தல்,அதாவது வேப்பங்குச்சியில் பல் துலக்குதல்,யோகா,தியானம் செய்தல்,கம்மங்கூல்,கேல்வரகு கூல் அருந்துதல்,வாழை இலை,அரச இலையில் சாப்பிடுதல்,போன்ற பாரம்பரிய பழக்கங்களை முளையிலிருந்தே பதிய வைத்தலே தொன்மையான சமுதாய தலைமுறையினை தோற்றுவிக்க வழிவகுக்கும்.ஒழுக்கவியல் செயல்பாடுகளை போதிக்கும் தளமாகவும்,பண்பட்ட மனத்திண்மையினை கல்வியாளர்கள் கொண்டு அதனையே மாணாக்கர்களுக்கும் பயிற்றுவிக்கும் பொழுது அறிவுக்கூர்மை உடைய,மானுடவியல் தன்மை உடைய புதிய சமுதாயத்திற்க்கான தலைமுறையினரை தோற்றுவிக்கலாம். தன்னல மறுப்பாளர்களும்,துறவு மனப்பாங்கு உள்ள இளைஞர்களிடம் தனி மனித வாழ்வில் நேர்மையாகவும்,பொது வாழ்வில் தூய்மையாகவும்,வார்த்தையில் வாய்மைத்தன்மை உள்ளவர்களாகவும்,சமூக நலன் சார்ந்த சிந்தனைகளும்,அடக்கம்,பணிவு,எளிமை ஆகிய குணாதிசியங்களை கொண்ட பண்பாளர்களாகவும் வளர்த்தெடுத்து இச்சமூகத்திற்க்கான கடமையினை இயல்பிலேயே உணர்ந்தவர்களாய் கல்வியின் நிறைவுப்பகுதியின் பொழுது அவர்களை சமுதாயத்திற்க்கு சமர்ப்பிக்க வேண்டும்.


மருத்துவம்: நமது பாரம்பரிய மருத்துவங்களான சித்த மருத்துவம் மற்றும் ஆயுர் வேதம் ஆகியன பற்றிய புரிந்துணர்வு, வளரும் தலைமுறையினரிடமும்,மாணவ பருவத்தினரிடமும்,ஏனைய பிறரிடமும்,வளர வேண்டும்.இவைகள் மேற்கண்ட கல்வி முறை அமைவதனால் இயல்பாகவே நிகழும்.பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் ஒவ்வொரு படிநிலைகளில் பயன்படுத்தும் சூழ்நிலையினை,சூழலியல் சார்ந்து,கல்வி முறை சார்ந்து,விழிப்புணர்வு ஊடகம் சார்ந்து,பல்வேறு துறைகள் சார்ந்து,சித்த,ஆயுர்வேத,மருத்துவ முரையினை பற்றிய தேலிவுறுதல் சமூகத்தில் ஏற்படுத்த முனைத்ல் வேண்டும்.அன்றாட சராசரி வாழ்வியலில் ஏற்படும் உடல் உபாதை சீர்கேடுகளுக்கும்,உளவியல் சீர்கேடுகளுக்கும்,உள்ளுறுப்பியல் சார்ந்த விடையங்களுக்கும் இத்தகைய பாரம்பரிய மருத்துவமுறையே பயன்படும் சூழல் எங்கினும் நிலவும்.இதன் மூலம் ஆங்கில மருத்துவத்தினை நம் நாட்டினை விட்டு முழுவதும் அகற்ற முடியும். சுற்றுப்புறச்சூழல் சுத்தம் மற்றும் சுகாதாரம்: சமூகத்தின் சுற்றுப்புற சூழலுக்கு சீர்கேடு விளைவிக்கும் மது,புகையிலை பொருட்கள்,போதை பொருட்கள்,அன்னிய நாட்டு இனிப்பு வகைகள்,தரமற்ற இறைச்சியில் இருந்து தயாரித்து நமது நாட்டு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வறுவல் வகைகள்,பன்னாட்டு குளிர்பானங்கள் என்ற பெயரில் விற்க்கப்படும் இரசாயன பூச்சிக்கொல்லிகள்,சுகாதாரமற்ற விதிமுறைகளுக்கு புறம்பான உணவகங்கள்,சாலையோர சிற்றுண்டிகள்,பாக்கு வகைகள்,சீவல் வகைகள்,நெகிழி பைகளில் விற்க்கப்படும் தண்ணீர் பைகள் மற்றும் நெகிழிப்புட்டிகளில் விற்க்கப்படும் தண்ணீர்,ஆகியனவற்றை முற்றாக இச்சமூகத்தில் அகற்றுவதற்க்கான கொள்கையினை அறுதியிட்டு உறுதியாக தடை செய்ய முனைப்பு காட்டி,உடனடியாக தடை செய்து சமூக சிக்கல்களுக்கு வழிவகுக்காமல்,படிப்படியாக படிநிலைகள் மூலம் அதனை நோக்கிய முன்னெடுத்தலை நோக்கி செல்ல வேண்டும்.உணவகங்களில், விரைவு அயல் நாட்டு உணவு வகைகளை அதாவது நமது தட்வெட்ப சூழ்நிலைக்கு ஒவ்வாத அனைத்து உணவு வகைகளையும் தடை செய்யும் முன்னெடுத்தல் படிநிலை,படிநிலையாக நகர வேண்டும்.மாற்றாக நமது பாரம்பரிய உணவே மருந்து என்னும் கோட்ப்பாட்டில் உள்ள இயற்கை உணவு வகைகளை சமுதாயத்தில் அனைவரும் பின்பற்றுவதற்க்கான கட்டாய நிலையினையும் உருவாக்கி,வளரும் இளைய தலைமுறையினரும் பின்பற்றும் வகையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்,பல்கலைகழகங்கள் என முக்கிய தளங்களில் இதனை விலையில்லா பொருட்களாக கொண்டு வர வேண்டும்.ஏனைய சமூகத்தின் பிற பகுதிகளிலும் தழைத்தோங்க செய்ய வேண்டியதற்க்கான ஆக்கப்பூர்வ செயல்முறைகளை விரைவுப்படுத்தி ஐந்தாண்டிற்க்குள் முழுமையாக பூர்த்தி செய்யவேண்டும்.முதலாளித்துவ நாடுகளில் இருந்து நமது நாட்டின் தன்மையியல் கூறுகளையும்,பண்பியல் கூறுகளையும் கெடுக்கும் பொருட்டு இங்கு விற்க்கப்படும் அனைத்து பன்னாட்டு விளையாட்டுப்பொருட்கள்,நெகிழி ஒட்டிகள்,அன்னிய நுகர்ச்சி வகையிலான சாகச கதாபாத்திரங்களை வடிவாக்கி விற்க்கப்படும் நெகிழி ஒட்டிகள்,மின்னணுவியல் மகிழுந்துகள்,மின்னணுவியல் விளையாட்டு உபகரண பொருட்கள்,நெகிழி விளையாட்டு பொருட்கள்,ஆகியனவற்றையும் முற்றாக உள்நாட்டில் உற்பத்தி கொள்முதல்,ஏற்றுமதி இறக்குமதி,ஆகியன அனைத்தின் நடைமுறைகளையும் படிப்படியாக குறைத்துக்கொண்டே முழுவதும் அகற்றும் நோக்கோடு செயல்பட்டுக்கொண்டே,இதற்க்கு மாற்றாக நமது பாரம்பரிய மரப்பாச்சி பொம்மை விளையாட்டுப்பொருட்கள்,மர வகையிலான பாரம்பரிய விளையாட்டுகள்,திட,நில வடிவில் செயற்க்கையாக உருவகபடுத்தி விளையாடப்படும் விளையாட்டுகள்,இதர பாரம்பரிய விளையாட்டுகளை பற்றிய புரிதலை கல்வி முறையிலேயே அடிப்படையிலிருந்தே பயிற்றுவித்து,சமூகத்தில் நமது தொன்மை சார்ந்த விளையாட்டுகள் மட்டுமே என்ற கொள்கையினை முழுமையாக அமல்படுத்தும் நோக்கத்தினை நோக்கிய முன்னெடுத்தலை கொண்டு பயணிக்க வேண்டும்.சுற்றுப்புற சூழலை கேடு விளைவிக்கும் குப்பைகள்,மின்னணு பொருட்கள்,எந்திரவியல் பொருட்கள்,மருத்துவ கழிவுப்பொருட்கள்,இதர சமூக சீரழிவுக்கான அபாய பொருட்களை எவ்வாறு இச்சமூகத்தில் அண்ட விடாமல் கையாண்டு சுத்தமாக வைத்திருப்பது என்ற நல்லொழுக்க நற்பண்புகளை முளையிலிருந்தே,ஆழ் மனதில் வேரூன்ற செய்யும் கல்வி முறை பாடத்திட்டம் அமைக்க வேண்டும்.பாரம்பரிய உடையணிதல்,நாகரீக நிலையியல் பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவது,தொன்மை மிகுந்த செம்மாந்த அக ஒழுக்க பழக்கவழக்கங்களை போதித்தல்,மேலும் நமது விவசாய மண்ணின் வளத்தினை பாதிக்கும் உயிரி இரசாயன பூச்சிக்கொல்லிகள்,இரசாயன உரங்கள்,மரபணு மாற்று பயிர்கள்ஆகியனவற்றை தடை செய்தல்,பாரம்பரிய பழங்கள்,தாவர வகைகள்,விலங்கினங்கள்,ஆகியனவற்றின் சுய காப்புரிமை பேணுதல்,பாதுகாத்தல்,நீர்நிலைகள்,குளங்கள்,வாய்க்கால்கள்,ஏரிகள்,ஆற்றுப்படுகைகள்,நதிகள்,ஆறுகள்,ஆகியனவற்றின் தேவை பற்றிய புரிந்துணர்வையும்,அதனை களங்கப்படுத்தும் அனைத்து செயல்களையும் தடை செய்தல்,அவற்றை கண்காணிக்கும் காவல் படை ஒன்றை நிறுவி தீவிர கட்டுக்கோப்புகளை உருவாக்குதல்,கட்டிடங்கள்,இல்லங்கள்,வணிக வளாகங்கள்,வர்த்தக வளாகங்கள்,அடுக்குமாடி குடியிருப்புகள்,மருத்துவமனை கட்டிடங்கள், கல்லூரி கட்டிடங்கள்,பள்ளி கட்டிடங்கள்,ஆகியனவற்றின் விதிமுறை மீறல்கள் குறித்தும்,இரும்புக்கரம் கொண்டு அடக்கி முறைப்படுத்தி சட்டம் வகுத்து ஆவண செய்தல்.,மண்பாண்ட பொருட்களின் பயன்பாட்டை அதிகரிப்பதர்க்கு உண்டான வழிமுறைகளை துரிதபடுத்தி,நெகிழி அடைப்புகளையும் தடை செய்யும் கொள்கையினை நோக்கி செல்லல்,பள்ளிகள் முதலே பாரம்பரிய உணவருந்தும் முறையான வாழி இலையில் உணவருந்தும் முறை முதலியவற்றை ஊக்குவித்து செயல்படுத்துதல்,சமுதாயத்தின் அனைத்து பகுதிகளிலும் மண்பான்ட குடிநீர் பாத்திரங்களை தண்ணீர்பந்தல் வடிவில் அமைத்து முழுவதும் பாரம்பரிய வடிவிலேயே அமைத்தல்,புவெளி தரை சாலைகள் அமைத்தல்,மரக்கன்றுகள் மிக அதிகளவில் நட்டு சுற்றுச்சூழல் பல்லுயிரியல் பேணுதல்,சீம,கருவேலமரம்,காட்டாமணி தாவர வகைகள்,யூக்லிப்டஸ்,போன்றவற்றினை முழுவதுமாக வேரோடு அழித்தொழிப்பதற்க்கான செயல்முறைகளை துரிதப்படுத்துதல்,அரசு அலுவலகங்கள்,அரசுத்துறை நிறுவன்ங்கள்,தனியார் துறை நிறுவனங்கள்,பொது இடங்கள்,போன்ற சமூகத்தின் அனைத்து இடங்களிலும் சுத்தத்தினை பராமரிக்க,கண்காணிக்க தவறிய அதிகாரிகள்,அமைச்சர்கள்,அலுவலர்கள் ஆகியோரையும் தகுதி நீக்கம் செய்தல்.,போன்ற பலவற்றின் மூலம் சுற்றுச்சூழல் சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணப்படும்.


விவசாயம்: இயற்கை வழி வேளாண்மை மட்டுமே செய்வித்தலுக்கான கட்டாய நடைமுறை சட்டம். இயற்கை வழி வேளான் முறைக்கான விழிப்புணர்வும்,நடைமுறை சட்டரீதியிலான ஆக்கப்பூர்வ வழிவகைகளை கடுமையாக்க வேண்டும். இயற்கை வழியிலான நெல்,பழங்கள்,மரங்கள்,காய்கறிகள்,பருப்பு பயிர்கள் என அனைத்தையும் அரசே பல இடங்களிலும் அரசுக்கு சொந்தமான இடத்தில் நிறுவி மற்றவர்களும் செய்யும் பொருட்டு முன்னுதாரணியாக செயல்படுதல். இயற்கை வழியிலான விவசாயம் செய்பவர்களுக்கு அதிக பட்ச எல்லா தரப்பு விடையங்களிலும் முன்னுரிமை அளித்து முதல் தர மதிப்பீடு அளித்தல். நாட்டின் பெரும்பகுதி நிலங்கள் விவசாய நிலங்களாக இருப்பதனை உறுதி செய்து நிலத்தை,நீர்.,மண் வளத்தினை காக்க கடுமையான சட்டம் இயற்றுதல்.அதனை நடைமுறைக்கு கொண்டுவருதல்.,அதனை கண்காணிக்க நெறிமுறைப்படுத்த தவறிய அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல். நேர்மையாக செயலாற்றும் அதிகாரிகளுக்கு சிறப்பு கவுரவிப்பு வழங்கி சமூகத்தில் அவர்களின் மீதான மதிப்பை அதிகரிக்க செய்தல்.,இதன் மூலம் மற்ற அதிகாரிகளும் இதனை பின்பற்றி வளர வழிகோளிட முடியும். இரசாயன உரங்கள்,உயிரி பூச்சிக்கொல்லிகள் ஆகியனவற்றையும் மரபணு மாற்று பயிர்களையும்,மரபணு உட்செலுத்துதல் மற்றும் சோதனை முறைகளையும் முற்றாக தடை செய்தல். விளை விலை நிலங்களான மாறும் அவலத்தினை அடக்கி ஒடுக்க கடுமையான சட்டம் கொண்டுவந்து குற்றவாளிகள் ஒடுக்கப்பட வேண்டும். இயற்கை வழியிலான வேளாண் விவசாயத்திற்க்கான அரசின் ஊக்கத்தொகைகளை எளிதான வழிவகைகள் மூலம் விவசாயிகள் பெறுவதற்க்கான ஏற்படுத்துதல். இயற்கை விவசாயத்தின் மூலம் பயிரிடப்பட்டு கொள்முதல் செய்யப்படும் விவசாய பொருட்கள் மட்டுமே வெளிச்சந்தையிலும் உழவர் சந்தையிலும் விற்கப்பட வேண்டும் என்ற கட்டாயமாக்கல் சட்டம் நடைமுறைக்கு வரவேண்டும்.


அரசுடைமை: பள்ளிகள்,கல்லூரிகள்,பல்கலைகழகங்கள்,மருத்துவமனைகள் அனைத்தும் நாட்டுடையாக்கம் செய்யப்பட்டு,பொதுத்துறையாக மாற்றி இலவச கல்வி,இலவச மருத்துவ சேவையினை வழங்குவதற்க்கு உண்டான செயல்முறைகள். குறுந்தகடுகள் மற்றும் ஒலிநாடாக்கள்,அனைத்தும் அரசின் உடைமையாக மாற்றப்பட்டு,அரசின் பதிப்புரிமையும் காப்புரிமையும் பெறுவது கட்டாயமாக்கப்படுதல். அரசு தொலைகாட்சி சேவையினை விரிவுபடுத்தி,நெறிமுறைப்படுத்தி குறைந்த கட்டணத்தில் தொலைகாட்சி சேவை வழங்குதல். வணிக,வர்த்தக வளாக கட்டிடங்கள் அனைத்தின் நிலங்களும் அரசுடைமைக்குள் கொண்டுவருதல். இயற்கை எரிவாயு மற்றும் எண்ணை நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல்,டீசல்,முதலியன அனைத்தும் நாட்டுடைமையாக்கம் செய்து ஏழை எளிய கட்டணத்தில் வழங்குதல்.


சட்டம் ஒழுங்கு: மது மாது புகையிலை பொருட்கள் அனைத்தும் முற்றாக தடை செய்தல். சமூகத்தின் அனைத்து கட்டமைப்பு சார்ந்த விடையங்களிலும்,பொது நுகர்வோர் பயன்படுத்தும் பொதுமை சார்ந்து விடையங்களும் வரைமுறைப்படுத்தப்படுதல். மக்கள் தங்களின் நாடு சார்ந்த,சமூகம் சார்ந்த கடமையினை உணர்வதற்காக கல்வி ரீதியாக,பொதுத்தளங்கள் ரீதியாக விழிப்புணர்வினை ஏற்படுத்த முனைதல். வக்களிக்க தகுதி உடைய வயதினை அடைந்த அனைவரும் வாக்காளர் அடையாள அட்டையினை கட்டாயம் வைத்திருப்பதை உறுதி செய்யும் சட்டம்.அவ்வாறு வைத்திருக்காதவர் மீது அதிகபட்ச அபராதம் விதித்தல்.வாக்காளர் அட்டையானது பத்து கைவிரல் ரேகை மற்றும் கருவிழிப்படலம் அடிப்படையில் தனி எண் அளித்து உருவாக்குதல்.,ஆதார் அட்டை போன்ற தேவையில்லாதவற்றையினை ரத்து செய்தல்.வாக்காளர் அடையாள அட்டையானது அனைத்து அத்தியாவசியமான நடைமுறைகளுக்கும்,கடவுசீட்டு பெறுவதற்கும்,பல்கலைகழக உயர்கல்வி பெறுவதற்கும்,போன்ற அனைத்திற்க்கும் வாக்காளர் அட்டை கட்டாயம் என்ற உறுதி செய்தல் சட்டம்.அவ்வாறு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.அதனை போன்றே பதினெட்டை வயதினை பூர்த்தி அடைந்த கட்டாய வாக்களிக்கும் சட்டத்தினையும் இயற்றி தேர்தலின் பொழுது கட்டாயமாக ஜனநாயக கடமையான வாக்களிப்பதனை உறுதி செய்யும் சட்டம்...அவ்வாறு வாக்களிக்காத நபர்கள் மீது அதிகபட்ச அபராதம் விதித்தல் மற்றும் அவரின் மீது புகார் தகவல் அறிக்கை பதிவு செய்து கடவுச்சீட்டு போன்ற முக்கிய ஆவணங்கள் வழங்கபடாது எனவும் அறிவித்து அரசாணை வெளியிடுதல்.பதினெட்டு வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்காளர் அடையால அட்டை மட்டுமெ அனைத்து விடையங்களுக்கும் அவசியமானது என்பதனை உறுதி செய்யும் சட்டம்.. சட்ட விதிமுறைகளை பின்பற்றாத அலட்சிய நபர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி அதிகபட்ச அபராதம் விதித்தல்,அபராதம் கட்ட தவறுவாறேனில் அதிக ஆண்டு சிறைத்தண்டனை விதித்தல். மக்கள் தொகைக்கு ஏற்ப காவல்துறையில் அதிகாரிகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்துதல்,மக்கள் தொகையில் பதினைந்து சதவிகிதம் அளவிற்க்கான காவலர்களின் எண்ணிக்கையினை தோற்றுவித்தல். மக்களாகியவர்கள்,தாங்கள் தொன்றுதொட்டு பாரம்பரியமாக பின்பற்றி வரும் பண்பாட்டு சமய நெறி சார்ந்த பழக்கவழக்கங்களுக்கு தடையாகவோ,எதிராகவோ,அவர்களின் உணர்வுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் எந்தவொரு காரணியும் சட்ட விரோதமானவை....அத்தகைய காரணிகளை கடுமையான சட்ட நடவடிக்கைகள் கொண்டு அடக்கி ஒடுக்க வேண்டும். மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் சமூக விரோத கும்பல்களான,கடன் வட்டி கும்பல்கள்,கட்டப்பஞ்சாயத்து கும்பல்கள்,அடியாள் கும்பல்கள்,வழிப்பறி கும்பல்கள்,திருட்டு கும்பல்கள்,கொள்ளை கூட்டத்தினர்,கொலை குற்றம் செய்து வெளியில் சுதந்திரமாக சுற்றித்திரியும் நபர்கள்,ஆள்மாறாட்ட குற்ற வழக்குகளில் உள்ள தண்டனை பெறாத வெளியில் உள்ள நபர்கள்,போலித்தன நபர்கள்,குறுக்கு வழியில் தானும் ஈடுபட்டு சமுதாயத்தினையும் ஈடுபடுத்த முனைந்து வரும் கும்பல்கள்.,போன்ற அனைத்து சமூக விரோத,சட்ட விரோத கும்பல்களையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி கடுமையான மரண தண்டனை விதித்தல். மக்கள் மன்றம் என்ற ஜனநாயகத்தின் மக்களை நீதிபதிகளாக கொண்ட மன்றம் ஒன்று அமைக்கப்பட்டு,மக்களுக்கு விரோதமாக,நாட்டின் இயற்கை வளங்களுக்கு எதிராகவோ,சமூக சூழலுக்கு எதிராகவோ,அடிப்படை கட்டமைப்புகளுக்கு எதிராகவோ,நமது பாரம்பரிய பண்பாட்டிற்க்கு எதிராகவோ, தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு அரசாவது சட்டமோ,விதிமுறையோ,கட்டுப்பாடுகளோ,நடைமுறைகளோ,செய்யும் பட்சத்தில் அதனை எதிர்த்து மக்கள் மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாக்கெடுப்பு நிகழ்த்தி மக்களின் வாக்கு வல்லாண்மையினை பயன்படுத்தி அந்நடவடிக்கையினை இரத்து செய்து,அவ்வரசினையும் தகுதி நீக்கம் செய்து அகற்றுதல்.மக்கள் மன்றமே அனைத்து அதிகாரங்களையும் கொண்டது.மேலும் அரசாங்கம் மக்கள் நலனை கருத்தில்கொண்டு என்று கூறியோ,அல்லது நலத்திட்டம் என்ற பெயரில் செய்யும் எந்தவொரு விடையத்திற்க்கும்,சட்டம் தொடர்பான விடையத்திற்க்கும்,அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தினை திருத்தும் முக்கிய நடவடிக்கைகளுக்கும்,பொருளாதாரம் சார்ந்து,விவசாயம் சார்ந்து,சுத்தம் சுகாதாரம் சார்ந்து,சட்டம் ஒழுங்கு சார்ந்து,கொள்கைகள் சார்ந்து, நோக்கங்கள் சார்ந்து,போன்ற விடையத்திற்க்கு மக்கள் மன்றத்திடம் பெரும்பான்மை அடிப்படையிலான ஒப்புதலையும் பெறுவது அவசியம்...அவர்கல் ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்தால் அக்குறிப்பிட்ட சார்ந்தவற்றின் மீது எந்தவொரு விடையமும் செய்ய இயலாத முடக்க நிலை அரசின் மீது ஏற்படுத்தும் உறுதி சட்டம்...ஒவ்வொரு கிராமசபை பஞ்சாயத்துகளிலும் மக்கள் மன்றம் செயல்படும்... அவற்றின் நீதிபதியாக கிராம மக்கள் அனைவராலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் நீதிபதியாக செயல்படுவார்...ஒவ்வொரு கிராம சபையும் ஒவ்வொரு குடியரசாக சுய,தற்சாபாக செயல்படும் நிலையினை உறுதி செய்தல்.கிராம மக்கள் மன்றம் என்பது ஜனநாயகத்தின் ஆணிவேர் மற்றும் தூண்கள்.மக்கள் மன்றம் என்பது கிராம்ம்,நகரம்,மாநகரம்,மாநிலம்,தேசிய அளவிலான வகையில் செயல்படும்.....இவை எல்லாவற்றிற்கும் உட்சபட்ச மன்றமாக இந்திய மக்கல் மன்றம் செயல்படும்....மாநிலத்தின் உட்சபட்ச மன்றமாக மாநில மக்கள் மன்றம் செயல்படும்....இவற்றின் நீதிபதிகளாக மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையினரும் செயல்படுவர்.,இந்திய மக்கல் மன்றம் என்பது மற்ற மக்கள் மன்றத்திடம் கட்டுப்படுத்தும் மையமாகவும்,கருத்து பரிமாற்றம் நிகழ்த்தும் தளமாகவும் மட்டுமே செயல்படும்..மேலும் ஒருங்கிணைந்த முடிவினை எடுப்பதற்கும் வழிகாட்டியாக மற்ற மக்கள் மன்றங்களுக்கு விளங்கும்....மற்றபடி இவற்றில் மேல்முறையீடு,மறுசீராய்வு என்பதெல்லாம் கிடையவே கிடையாது.....இதுமட்டுமல்லாமல் நாட்டின் முக்கிய தேவை கருதி மக்களே ஒருமித்து முடிவு செய்து மக்கள் மன்றத்தின் மூலம் அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவினை பிறப்பித்தல். லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றம் என்பதை உணர்ந்தும்,அதனை வாங்கி,லஞ்சம் கொடுக்காததனால் வேலையை தாமதிப்பது,இவற்றையெல்லாம் கண்காணிக்காத மேலதிகாரி மற்றும் இதற்க்கு சுழற்சி முறையில் பொறுப்பு வகிக்கும் அனைவரின் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல்,அனைத்து சொத்துக்களையும் முடக்கம் செய்தல்,தகுதி நீக்கம் செய்தல்.,பிணையில் வெளிவர முடியாத ஆயுள் முழுவதும் (வாழ் நாள்) சிறைத்தண்டனை விதித்தல்.,அரசியல் உரிமை,வாக்குரிமையை பறித்தல்,சிறையில் மிக்க்கடுமையான பணியில் ஈடுபடுத்துதல். இருபத்தி நான்கு மணிநேரமும் செயல்படும் காவல் உதவி மையங்கள் அதில் காவலர்கள் இருபத்தி நான்கு மணிநேரமும் இருப்பதனை உறுதி செய்து அவர்கள் பணியில் மட்டுமே கவனமாகவும் இருக்கிறார்கள் என்பதனையும் உறுதி செய்தல். மக்கள் அளிக்கும் புகாரின் பேரில் அதிகாரிகள் அதனை உரிய முறையில் ஆராய்ந்து எவரின் மீதும் நடவடிக்கையினை இருபத்தி நான்கு மணிநேரத்திற்க்குள் எடுக்காவிட்டால் நிரந்தர பணிநீக்கம் செய்தல்.,மேலும் சிறைத்தண்டனை விதித்தல். கொலை,கொள்ளை திருட்டு,வழிப்பறி,பாலியல் வன்கொடுமை,அசம்பாவிதங்கள் நிகழும் பட்சத்தில் சம்பவத்தில் உள்ள சம்பந்தபட்ட காவல் நிலைய ஆய்வாளரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல்.இதன் மூலம் இது போன்ற சம்பவங்கள் வேறு எங்கேனும் நிகழாமல் இருப்பதனை உறுதி செய்ய அதிகாரிகள் சிரத்தையோடு இருப்பதனை உறுதி செய்தல்.தேவை ஏற்பட்டால் சம்பந்தபட்ட பகுதி ஆய்வாளர் மீது தனி நீதிமன்றத்தில் தண்டனைக்குட்படுத்துதல் நடவடிக்கையும் எடுத்தல். மாவட்ட, மாநகர,மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் இயற்கை வளங்கள் சட்ட விரோதமாக கொள்ளையடிக்கப்பட்டாலோ,அழிக்கப்பட்டாலோ,தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்பட்டாலோ,அதன் மீது கண்காணிப்பும்,நடவடிக்கையும் எடுக்க தவறிய உரிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல். தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பவர்களின் மீதும்,இயற்கை வளங்களை சேதபடுத்துபவர்களின் மீதும் பிணையில் வெளிவர முடியாத அளவிற்க்கு அதிக ஆண்டு சிறைத்தண்டனைக்குட்ப்படுத்துதல். சட்டமன்ற உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,நகராட்சி மன்ற உறுப்பினர்கள்,மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,அரசு அதிகாரிகள்,ஆகியோர்கள் அதிகாரத்தினை தவறாக பயன்படுத்தினால் அவர்களை தக்க ஆதாரங்களோடு மெய்ப்பித்து மக்கள் மன்றத்தில் தகுதி நீக்கம் செய்தல். பொதுமக்கள்,நுகர்வோர்கள்,வாடிக்கையாளர்கள் ஆகியோரது தனி மனித உரிமைகள் மறுக்கப்பட்டால்,மறுக்கப்படுகிற அளவுக்கு அவர்களின் மன அழுத்ததிற்க்கு ஆளாக்கிய சம்பந்தப்பட்ட நபர்களை பிணையில் வெளிவர முடியாத அளவிற்க்கு சிறைத்தண்டனை விதித்தல். கீழதிகாரிகள் செய்யும் தவறுகளையும் மேலும் அவர்களின் நடத்தையினை கண்காணிக்க தவறிய மேல் அதிகாரிகளை தகுதி நீக்கம் செய்து அகற்றுதல். அரசு அலுவலர்கள் தங்கள் கடமையினை சரியான விதத்தில்,சரியான நேரத்தில் முடித்து வாடிக்கையாளர்களின் நலனை கருதி செயல்படமால் இருந்தால் அவரை தகுதி நீக்கம் செய்தல்.,அதனை கண்காணித்து மேற்பார்வையின் மூலம் நெற்முறைப்படுத்த தவறிய மேலதிகார அலுவலர்களையும் தகுதி நீக்கம் செய்தல்.,மற்றும் அதிக ஆண்டு சிறைத்தண்டனை விதித்தல். ஒவ்வொரு துறைக்கும் உள்ள அமைச்சர்கள்,அதிகாரிகள்,செயலாளர்கள்,இயக்குனர்கள் போன்ற முதன்மை செயலாக்க அதிகாரிகள்,இந்திய ஆட்சிப்பணி மற்றும் காவல் பணி,குடியுரிமை,அயலுறவு பணி அதிகாரிகள் ஆகியோர் தங்கள் துறைக்கு உட்பட்ட விடையங்களில் எவ்வித சட்டவிரோத சம்பவங்கள் நிகழாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அறிக்கை தனது மேலதிகாரிக்கு சமர்பித்தல்.,அப்படி சமர்பிக்காத அதிகாரியினை மேலதிகாரி தகுதி நீக்கம் செய்தல்,முன்னெச்சரிக்கை நடவடிக்கை வெறும் அறிக்கையாக மட்டும் இருக்கிறதா செயல்வடிவில் உள்ளதா எனவும் கண்காணிக்க மேலதிகாரி செயலாற்ற வேண்டும்.,அப்படி செயலாற்ற தவறி,அறிக்கை சமர்பிக்கும் அதிகாரிகளையும் நெறிமுறைப்படுத்த தவறி,கடமையினை செவ்வனே செயலாற்றாமல் இருந்தால் அவரையும் தகுதி நீக்கம் செய்தல்.,தங்கள் துறைக்கு உட்பட்டு,தங்கள் அதிகார எல்லைக்குள் வரையறுக்குட்பட்ட சட்ட விதிமுறைகள் சரியாக எல்ல சமூக களங்கள்,மற்றும் தளங்களிலும் கடைபிடிக்கபடுகிறதா என சோதித்து முழு நேர பணியில் ஈடுபட்டிருத்தல்.,அப்படி அதனை சரியக செய்ய தவறிய அதிகாரிகள்,அதனை தடுக்கவும் கண்காணித்து நடைமுறையினை செம்மைப்படுத்த தவறிய அதிகாரிகளையும் தகுதி நீக்கம் செய்து அகற்றுதல்.மிக அதிகமான சிறைத்தண்டனை விதித்தல். அமைச்சர்கள்,சட்டமன்ற,நாடாளுமன்ற,மாநகர,நகர்மன்ற,பேரூராட்சி,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,பிரதமர்,குடியரசு தலைவர்,நீதிபதி என நாட்டின் உட்சபட்ச அதிகாரத்தில் உள்ள எவரின் மீதும் புகாரானது உரிய ஆதாரத்தின் பெயரில் அளிக்கப்பட்டால்,அதன் மீது நடவடிக்கை எடுக்க தவறிய காவல் துறை அதிகாரி,அதனை கண்காணிக்க மேலதிகாரி,இதனை நெறிமுறைப்படுத்தாத அத்துறை செயலாளர்கள்,இயக்குனர்கள்,அமைச்சர்கள்,முதலமைச்சர் என யாராக இருந்தாலும் அவர்களை மக்கள் மன்றத்தில் நிறுத்தி தகுதி நீக்கம் செய்தல்.,ஆயுள் தண்டனை விதித்தல். நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு,விவேக நடவடிக்கையின் மூலம் நியாயமான,நேர்மையான,தீர்ப்பு விரைவில் வழங்கப்படுதலை உறுதி செய்யும் சட்டம் இயற்றுதல்.,அவ்வாறு தீர்ப்பு வழங்காது,வழக்கை நிலுவையில் நீட்டித்து சென்றுகொண்டிருக்கும் வழக்குரைஞர்,அதனை கட்டுப்படுத்தி நெறிமுறைப்படுத்தாத நீதிபதி என அவர்களின் மக்கள் மன்றத்தில் ஜனநாயகத்தின் நீதிபதிகளான மக்களால் தகுதி நீக்கம் செய்தல்.தீர்ப்பு சீக்கிரம் வழங்க வேண்டுமென்பதற்க்காக சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நீதிபதியின் மீதும் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை எடுத்தல்.மனுதாரருக்காக வழக்குரைஞர் வழக்காடும் முறையில் நிலுவையில் சென்றுகொண்டிருந்தால் அதனை கட்டுப்படுத்தி விரைவு படுத்த வேண்டியது நீதிபதியின் கடமை.,அவ்வாறு செய்யாத பட்சத்தில் தகுதி நீக்கம் பாயும்.,சிறைக்கும் தள்ளப்படுவர். மக்களானவர்கள் எந்நேரத்திலும்,எவ்விடத்திலும்,ஒரு அரசு அதிகாரியையோ,அரசு அலுவலரையோ,அமைச்சரையோ,முதல்வரையோ,ஆளுநரையோ,பிரதமரையோ,நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களையோ,பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையோ,ஊராட்சி மன்ற உறுப்பினர்களையோ,குடியரசு தலைவரையோ,சந்தித்து புகார் அளிக்கலாம்,அப்புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத எவரும் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.,மக்களை அவமதித்த வழக்கிற்க்கும் உட்ப்படுத்தப்பட்டு சிறைக்கு தள்ளப்படுவர். ஊடகத்துறை மற்றும் திரைத்துறைக்கு நெறிமுறைகள் வகுத்தல்.


பொருளாதாரம்: உலகமயமாக்கல் தனியார்மயமாக்கல் தாராளமயமாக்கல் வணிகமயமாக்கல் வர்த்தகமயமாக்கல் ஆகிய முப்பெரும் மேலாதிக்க கொள்கைகளை இந்தியாவில் இருந்து அகற்றி,அவற்றினை ரத்து செய்து,இவற்றி மூலம் உலகமயமாக்கல் என்ற பெயரில் நமது தட்வெட்ப சீர்தோஷ்ண நிலையினை சீர்குலைக்கும் காரணிகளை அகற்றுதல்,அரசு நிர்வகிக்க வேண்டிய முக்கிய துறைகளை தனியார் மயமாக்கி,மக்களை அல்லல்பட வைக்கும் நிலை மாறுதல்,அன்னிய பெரு முதலைகளுக்கு அனைத்து விதத்திலும்,வகையிலும்,முறையிலும்,வடிவத்திலும்,எளிய சாதக சூழ்நிலையினை ஏற்படுத்தி பணம் கொழிக்க செய்யும் நிலை மாறுதல்.மருத்துவத்தினை வணிகமயமாக்கும் இழி நிலையும் அகற்றப்படுதல்,கல்வி வர்த்தகமயமாகி செயற்கை எந்திர கல்வியின் மூலம், கொத்தடிமைகளாக அயல் நாட்டிற்க்கு நமது நாட்டு இளைஞர்களை ஏற்றுமதி செய்யும் அவல நிலையும்,அகற்றப்படுதல்.இது போன்ற பல காரணிகள் மற்றும் இந்த முப்பெரும் அன்னிய மேலாதிக்க கொள்கைகளின் பெயரால் வளர்ச்சி என்ற பெயரில் நமது அடிப்படையை தகர்த்து அதர பாதாளத்திற்க்கு அழைத்து செல்லும் காரணிகளை அகற்ற முடியும். நம் நாட்டின் சுய உற்பத்திக்காகவும்,சுய தேவைகளுக்காவும்,இதர தேவைகளுக்காவும் சாமனிய மக்கள் மற்றும் ஏனைய பிறரால் கண்டுபிடிக்கப்படும் ஆக்கக்கூறுகளுக்கு அரசாங்கமே முன்வந்து எல்லா உதவிகளையும் செய்தல்.இது போன்று சமூகத்தில் இருக்கும் நபர்களை இனம் கண்டு அரசாங்கத்திற்க்கு தெரியப்படுத்த ஆணையம் அமைத்தல். அமெரிக்கா,சீனா,ரஷியா ஜப்பான்,பிரான்ஸ்,பிரிட்டன்,பாகிஸ்தான்,போன்ற அயல் நாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் தீங்கு விளைவிக்கும் அனைத்து பொருளாதாரம் சார்ந்த விடையங்களையும் தடை செய்தல்.இங்கிருந்து அங்கே செல்லும் ஏற்றுமதி பொருட்களையும் தடை செய்தல்.,இறக்குமதி வருவாய் பொருட்களையும் தடை செய்தல்.,முற்றாக உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு மட்டுமே வணிக,வர்த்தக சந்தை நிர்ணய உரிமையினை வழங்கி,அங்கீகாரம் அளித்தல்.,நமது நாட்டின் அனைத்து தேவைகளையும் உள்நாட்டு வளங்களின் மூலமே நிவர்த்தி செய்யும் செயல்முறைகளை வகுத்து,அதற்கென்று தனி சுய ஆட்சி ஆணையம் அமைத்து அவற்றின் நடவடிக்கைகளையும் கண்காணித்து நெறிமுறைப்படுத்துதல்., இந்தியாவிற்க்கு எதிராக செயல்படும் நாடுகளின் மீது பொருளாதார தடை விதித்தல். சுயசார்பு தற்சார்பு பொதுமை சார்பு ஆகிய முப்பெரும் சார்பு கொள்கை முறையினை, மேற்கண்ட காரணிகள் (கல்வி,மருத்துவம்,விவசாயம்,சட்டம் ஒழுங்கு) மூலம் நிலைப்படுத்தி அன்னிய கலாச்சார முறைனை அகற்றுதல்.சமுதாய மாற்றத்திற்க்கான இக்கொள்கைகளை கொண்ட மக்களரசினை அமைக்க களம் காண்போம்.