தமிழ் முழுகிய சோழ மண்டலம்

*********************************

கோபுரம் ஏறிய தமிழ் எங்கள்

சாகரம் ஆண்டிட  வருக ..

மாபெரும் சோதனை கடந்த நம்

பன் மொழி மாநகர் ஆண்டிட வருக

கல்வியை கலையை

கவின் மொழி நடையை

கண்டிடச் செம்மொழி எழுக

தோல்விகள் நிலையிலை

தொழும்புகள் சரியிலை

துவண்டிடாத் தமிழ் மகள் எழுக.

குடம் தனில் ஏறி கோபுரம் தழுவிய தமிழே

தடம் தனை பதித்து தாமிரம் ஆகிய தமிழே

வடம் தனை பிடித்திட வான் புகழ்  தமிழரே வருக.

வல்லமை தமிழை வானுயர் செய்வோம் வருக

....கவிப்புயல் சரண்.....

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சரண்ராஜ்&oldid=2907011" இலிருந்து மீள்விக்கப்பட்டது