சிகரம்சதிஷ்குமார்
சதிஷ்குமார் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கீரமங்கலம் என்னும் ஊரில் சேவிபுஞ்சை என்னுமிடத்தில் பிறந்தவர்.இவரது பெற்றோர் சிதம்பரம் மற்றும் குணசுந்தரி என்போர் ஆவர்.இவர் தொடக்கக் கல்வியை அதே ஊரில் உள்ள ஒரு அரசுத்தொடக்கப் பள்ளியில் பயின்றார். அங்கு 5 ம் வகுப்பில் பயின்றபொழுது பள்ளியின் முதல் மாணவர் என்னும் சிறப்பை பெற்று அதற்குரிய சான்றிதழையும் பெற்றார்.தொடர்ந்து அருகில் உள்ள கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக்கல்வி பயின்றார்.அங்கு பயின்றபொழுது கல்வி, விளையாட்டு, இலக்கியம் என அனைத்து நிலைகளிலும் சிறப்பான பங்களிப்பை செய்து பள்ளியின் மாணவர் தலைவராக பள்ளி இறுதி ஆண்டில் நியமிக்கப்பட்டார். மேல்நிலைக்கல்வியின் இறுதி ஆண்டில் அவர் கணக்குப்பதிவியல் மற்றும் தணிக்கையியல் பாடத்தில் தமிழ்நாடு மாநில அளவில் முதல்மாணவனாக தேர்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்து 2004 ம் ஆண்டில் தமிழக கல்வித்துறையில் ஆசிரியராக பொறுப்பேற்று கொண்டார். கல்வித்துறையிலும், இலக்கியத்திலும், பொதுவாழ்விலும் இவர் தனது பங்களிப்பை சரியான முறையில் ஆற்றி வருகிறார். கல்வித்துறையில் ஆசிரியராகவும்,
பயிற்றுனராகவும் இலக்கியத்தில் கவிஞராக, பேச்சாளராக,எழுத்தாளராக தனது பங்களிப்பை செய்து வருகிறார்.பொதுவாழ்வில் நுகர்வோர் குழு, அரிமா சங்கம்,உலகளாவிய தனி மனித மேம்பாட்டு அமைப்பு போன்றவற்றில் தனது பங்களிப்பை செய்து கொண்டுள்ளார். சிகரம் தொட்ட ஆசிரியர் விருது, இளம் கவிஞர் விருது,சிறந்த அலுவலர் விருது என சில விருதுகளை பல்வேறு அமைப்புகளிடம் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
இவரது குடும்பத்தினரால் சிகரம் என்கிற பெயரில் நடத்தப்படுகின்ற ஒரு பள்ளி மற்றும் அறக்கட்டளையின் காரணமாக இவர் சிகரம்சதிஷ்குமார் என வழங்கப்படுகிறார்.