சிவகுமார் முத்தய்யா; (1978 ) நெற்களஞ்சியமான கீழ தஞ்சை திருவாரூர்- விளமல்- தண்டலை சேர்ந்தவர். விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்வியலை நுட்பமாக எழுதி வருகிறார். மேலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் விளிம்புநிலையில் வாழ்பவர்களின் வாழ்க்கைப்பாடுகளை புதிய கோணத்தில் பதிவு செய்து வருகிறார். இவர் எழுதியுள்ள மருத நிலம் குறித்த கதைகள் தஞ்சையில் எவரும் தொடாத களங்கள் ஆகும். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை. கதை,கவிதை, கட்டுரை, நாவல் என இயங்கி வருகிறார். 2000 பிறகு எழுத வந்த புதிய தலைமுறையை சேர்ந்தவர். தன்னுடைய படைப்புக்காக பல்வேறு விருதுகளும் பரிசும் பெற்றவர். தற்போது பத்திரிக்கையாளராக பணியாற்றி வருகிறார். இவர் படைப்புகள் தமிழின் முன்னணி இதழ்களில் வெளிவந்துள்ளன. தொகு

இதுவரை வெளிவந்துள்ள படைப்புகள்; தொகு

கிளிவரும்போது- சிறுகதைகள் தொகு

ஆற்றோர கிராமம்- குறுநாவல்கள் தொகு

செறவிகளின் வருகை- சிறுகதைகள் தொகு

செங்குருதியில் உறங்கும் இசை- சிறுகதைகள் தொகு

ஞாபக குறிப்புகள் - கட்டுரைகள் தொகு

இளையராஜாவின் காதலிகள் - சிறுகதை தொகுப்புகள்

தூண்டில் முள் வளைவுகள்- குறுநாவல்கள் தொகுப்பு

குரவை- நாவல் 2023