பயனர்:சுபஸ்ரீ ஸ்வாமிகள்/மணல்தொட்டி

சிவம் சிகாரம் + வகாரம் + ம்காரம் = சிவம் சிகாரம் - அறிவு, வகாரம் - மனது, மகாரம் - மாயை (ஆற்றல்) இவ்வுலகில் பிறந்துள்ள ஆன்மாக்கள் ஒவ்வொன்றின் ஆற்றலும், அறிவும் உயிரினங்களின் தன்மைக்கு ஏற்ப மாறுபாடு இருப்பினும், அந்த உயிர்கள் தங்கள் இனத்தின் மீது கொண்டுள்ள அன்பு அவற்றின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டு வாழ்க்கை அமைத்துக்கொள்வது, அந்த உயிரினத்தின் மனதில் தோன்றும் எண்ணங்களின் மாற்றங்களின் அடிப்படைதான் என்பது மறுக்கமுடியாத ஒன்று. அனைத்து உயிரினங்களின் மாற்றமுடியாத இயல்பும் இதுவே. ஒரு உயிரினம் எப்போது தன்னுடைய எண்ணங்களை மாற்ற முயற்சி செய்து அதன் எண்ணங்களின் நன்மை, தீமைகளை பிரித்து அதனுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபட்டு பலன் அடைந்து அதன் இலக்கை தொடுகிறதோ அந்த உயிரினமே உலகின் உயர்வு பெற்ற உயிரினமாகும். அப்படி உயர்வு பெற்ற உயிரினத்தின் முதன்மையான இனம், நம் மனித இனம். மனித இனம் சுமர் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி இன்று வரை படிப்படியக முன்னேறி ஒவ்வொறு துறையிலும் வெற்றியடைந்து நவீன நாகரீகத்தை நாடி இன்ப வாழ்க்கை வாழவேண்டும் என்ற மனதில் தோன்றிய எண்ணத்தின் பிரதிபலிப்பே இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் சமுதாய வளர்ச்சி. இந்த வளர்ச்சியின் அடுத்த வெற்றி எப்படியிருக்கும் என்பதுதான் அனைவரின் ஆவல். இந்த வளர்ச்சி எந்திரமயத்தை நோக்கியா? அல்லது இந்திர வாழ்வை அடைவதிலா? என்ற சந்தேகம் அனைவருடைய மனதில் தோன்றக்கூடிய எண்ணங்கள் அவர்களின் விருப்பத்தை பொறுத்து அமைந்திருந்தாலும், அதை தேர்ந்தெடுத்து செய்வதில்தான் அந்த ஆக்கத்தின் பிரதிபலன்கள் தெரியவரும். ஆனால் அந்த ஆக்கத்தினை செய்யத் துவங்கும் முன்னர் எவைக்கும் பாதிப்பில்லாமல் ஒன்றை தேர்ந்தெடுத்து அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை முன்கூட்டியே அறிந்து அனைவருக்கும் பயன் தரக்கூடிய ஒரு ஆக்கம் மனிதரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டால் உங்களால் எதை கூற முடியும். ஒன்றை அழித்து அதன் மூலம் இன்னொன்றை உருவக்குவது என்ற அடிப்படையில்தான் மனிதரால் இன்று வரை அனைத்து ஆக்கங்களும் செயல்படுத்தியுள்ளனர் என்பதை யாரேனும் மறுக்கமுடியுமா? இந்த ஆக்கங்களின் துவக்கம் என்பது மனிதரின் தேவைகளை இயற்கையான குணம், தன்னிச்சையான இயல்பு இவைகளுக்கு தூண்டுகோளாக அமைவது உணர்வுகளின் தூண்டுதளினால் அவர்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற ஆற்றலாக செயல்படுத்துவது எது? அந்த ஆற்றலால் தான் நினைத்த ஆக்கத்தினை உருவாக்க முயற்சியும் அதற்கான செயலும் செய்ய உறுதுணையாக இருப்பது எது? நினைத்த ஆக்கத்தை வெற்றியுடன் செய்து முடித்தவுடன் உண்டாகும் உணர்வு என்ன? அந்த உணர்வு எப்படி ஏற்படுகிறது? இவை அனைத்துமே ஒரு மனிதன் தன்னிச்சையாக தேடும் தேடலில்தான் அதன் உண்மைத் தன்மையை உணரமுடியும். அந்த உணர்வினை அடைய, இதை படிக்கும் அனைவருக்கும் ஒரு தூண்டுகோளாக அமையவே இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறேன். ஒளிரும் சுடர் விளக்காயினும், தூண்டுகோள் இல்லா சுடரும் ஒளிரா ஆகவே, ஒளி விளக்கின் சுடர் அனையாமல் இருக்கவே இந்த கருத்துருக்கள் பயன்படுமேயன்றி, விளக்காவதும் அதற்கு திரியாகவும், எணணெயாகவும் உள்ளதற்கு நெருப்பை மூட்டி ஒளியேற்றிவைப்பது தங்களிடம்தான் உள்ளது. அதுதான் உங்களின் இருளை நீக்கும் வழி. இந்த இருளை நீக்க தேவையான ஆகமங்களைத் தேடித்தான் இந்த பயணமும் தொடர்கிறது. சிவம் என்ற ஒரு சொல் உலகின் மிகப்பெரும் தத்துவத்தை உள்ளடக்கியுள்ளதை முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இது உலகத்தின் இயக்கம். உயிர் உடல்களின் இயக்கமும் இதுவே. தத்துவம் என்ற சொல்லிற்கு விளக்கம் தெரிந்தால்தான் சிவம் என்ற தத்துவத்தின் உண்மையை உணர முடியும். தத்துவம் தத் + துவ + அம் = தத்துவம் தத் - ஒன்று, துவ - மற்றொன்று, அம் - இயக்கம் ஒன்று மற்றொன்றோடு இணைந்து இரண்டும் ஒன்றாக கலந்து இயக்கத்தின் ஆற்றலாக செயல்பட்டு பயன்தரும் ஆக்கம் என்பதன் சுருக்கம்தான் தத்துவம். இந்த விதிப்படிதான் உலகம் இயங்குகிறது என்பதை அறிந்துகொள்ளும் முறையும், இந்த இயக்கத்தின் மூலம் உயிர் உடல்களும் தத்துவமசி என்ற மற்றொறு பரிமானமாக இயங்குவதையும் மனதில் பதியும்படி உணர்வினை அறிவுப்பூர்வமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி உணர்வுபூர்வமான விளக்கமும், கருத்துருக்களும் அமையும் சொற்களே தத்துவமாக அமையும். தத்துவமசி தத் + துவ + மசி = தத்துவமசி தத் - ஒன்று, துவ - மற்றொன்று, மசி - உயிர் அறிவு அவன் என்ற ஒருவரும், இவன் என்ற மற்றொறுவரும் இரண்டும் இணைந்து ஒன்றாக கலந்து அவன் இவனே என்று உள்ளத்தில் உணர்வுபூர்வமாக அறியப்படும் உணர்ச்சியின் ஆற்றல் அறிவோடு கலந்து சிந்தனைகளை விரித்து சித்தம் என்ற பேரருளை அடைந்து எல்லாம் அவன் செயல் என்ற உண்மையை உணர்ந்து, என்னுடையது என்று சொல்ல இந்த உலகில் ஒன்றும் இல்லை என்ற மர்க்கத்தின் உண்மையைச் சொல்வதே இத்த தத்துவமசியின் கருத்தாகும். இந்த பேரருளை அடையச் செல்லும் பாதையை தேர்ந்தேடுக்க பல வழிமுறைகள் ஒவ்வொருவரின் மனதின் விருப்பததிற்கு ஏற்ப தேர்ந்தெடுத்தாலும் கொண்டுபோய் சேர்க்கும் இடம் ஒன்றுதான். அந்த இடத்தை எவராலும் அடையமுடியாது என்ற மனப்பான்மை உடையவர்களுக்கு சிவத்தை அடையும் பாதையின் மாயத்திரை விலகுவதில்லை. முடியும் என்ற நம்பிக்கையுடன் துன்பத்தின் பாதையிலும் நன்மைகளை விதைத்து பயனை எதிர்பார்க்காமல் யார் கடந்து வருகிறார்களோ அவரே அந்த பேரருளை அடையும் உயர்வினை பெறுகிறார்கள். இதற்கு ஆகமங்களை அறிந்திருக்க வேண்டியதில்லை, பூதங்களை அடக்கியாள வேண்டியதில்லை, காடு மலைகளுக்குச் சென்று கடுந்தவம் செய்ய வேண்டியதில்லை. உன்னிடம் உள்ள அனைத்தையும் துறந்து, எல்லாம் இறைவனுக்கே என்று தூய உள்ளத்தோடு இறைவனை நாடும் பக்தனுக்கு அவர் தன்னையே தருவார் என்ற உண்மையை, மெய்யறிவை உணர்ந்தவர்களால் மட்டுமே இதன் தத்துவத்தை அறியமுடியும். இந்த தத்துவந்தான் சைவ சித்தாந்தத்தின் முதன்மை கோட்பாடுகளான தற்பதம், தொம்பதம், அசிபதம் ஆகிய மூன்றின் கூட்டு சேர்க்கையின் உணர்வை ஒவ்வொறுவருக்கும் தெளியவைக்கும் உபதேசமே நான்மறைகளில் வீடு என்ற பெரும் தத்துவதை உணர்த்தும் 'கருபொருளாக' அமைகிறது. தற்பதம் தன் + பதம் = தற்பதம் தன் - தன்னுடைய, பதம் - திறன் (நிலை) தன்னுடைய திறமைகளை ஒருவர் அறிந்து, அதன் மூலம் தானும், தன்னைச் சார்ந்தோருக்கும் பயன் அளிக்கக்கூடிய செயல்களைச் செய்வது, தன் திறமைகளை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து, கற்றுக்கொள்பவரும் அவரின் திறன்களின் மூலம் தானும், தன்னைச் சார்ந்தோருக்கும் பயன் அடையும் செயல் தர்மம் என்ற உயர்ந்த அறத்தில் அடங்கும் என்பதை தெரிந்து தன் திறமைகளை பெற்றிருப்பதே தற்பதத்தின் தத்துவம். இன்னும் எளிமையக கூறவேண்டுமென்றால் பசித்தவருக்கு உணவு அளித்து ஒரு வேளை பசியை நீக்குவதை விட, உழைத்துப் பிழைக்க தொழிலை கற்றுக்கொடுப்பதே மனுட தர்மத்தின் சிறந்த அறம் என்பதை உணர்வுபூர்வமாக அறிந்து வாழ்விப்பதே தற்பதத்தின் தத்துவம். தொம்பதம் துவம் + பதம் = தொம்பதம் துவம் - அசையாத, (தொம்) - தான் (நீ), பதம் - திறன் (நிலை) அகப்பொருளில் எதர்க்கும் அசையாத நிலை பொருளை அறிந்து, அதை தம் திறனால் அடக்கும் வல்லமை பெறுவது. அகப்பொருளில் அசையாத நிலையாக இருப்பது ஆணவம், கன்மம் (காமம்), மாயை (ஆசை) இந்த மூன்றும் ஒவ்வொறு மனிதருக்குள்ளும் நிலையாக தங்கியிருக்கும் மும்மலங்களை (திரிமலம்) அன்பு, கருணை, தியாகம் என்ற பண்பினால் அடக்கி ஒழுக்கமாகிய நேர்மையின் அறநெறியினை வழிநடத்திச் செல்லும் தத்துவதை உணர்ந்து அதை பிறருக்கும் உணர்விப்பதே தொம்பதமாகும். ஆணவம் • நான் • எனது • என்னுடைய • என்னால் என்ற எண்ணம் கொண்டிருத்தல். கன்மம் (காமம்) • சபலப்பட்டு விரும்பத்தகாத செயலைச் செய்வது. • கள்ளத்தனமாக காதல் இச்சைக்கு வசப்படுவது. • மோகம் கொள்வது. மாயை (ஆசை) • மனதில் தோன்றும் அளவற்ற விருப்பங்களை அடைவதற்காக எதையும் செய்யத்தூண்டும் செயலைச் செய்வது. • பிறரைப் பார்த்து ஏங்குவது. • அடம் பிடித்து அடையத் துடிப்பது. இந்த மூன்று நிலைகளும் ஒரு மனிதனை 1. பொய் 2. களவு (திருட்டு) 3. சினம் (கோபம்) 4. வஞ்ஜம் (பகை வளர்த்தல்) 5. பொறாமை என்ற பாதகச் செயல்களுக்கு துணைபோகும் என்பதனை அறிந்து, இவைகளிலிருந்து விடுபட வாக்கும் மனதும் ஒருநிலைப்படுத்தி தவம் என்ற வேள்வியை சிந்தனைகளின் மூலம் வார்க்கும் பொழுது புதைந்துள்ள மனகுகையிலிருக்கும் மாயத்திரை விலகி அன்பென்ற சிவம் தோன்றும் தத்துவத்தை உணர்ந்து அறிவதே தொம்பதமாகும். அசிபதம் அசி + பதம் = அசிபதம் அசி - ஆவது (ஆகின்றாய்); பதம் - திறன் (நிலை) பரம்பொருள் அனைத்துமாகி, அனைத்திலுமாகி, உருவமில்லா உயிருமாகி, அறிவான அருட்பெரும் சோதியாகி உணர்வாய் உணரும் உருவமுமாகி, ஆதி அந்தம் நடுவுமாகி மனதில் ஒன்றி நிற்கும் ஒருவனே இறைவன் என்று ஒருவரின் மனது எப்போது பக்குவப்படுகிறதோ, அவ்வாறு பக்குவப்பட்ட மனதில் தெளிவாகும் எண்ணத்தில் தற்பதம், தொம்பதம் ஆகிய இரண்டின் தத்துவதின் நற்பண்புகளை கடைபிடித்து வாழ்பவருக்கு ஏற்படும் உணர்வானது... "எதுவும் நிலையில்லை, எதுவும் நிலைப்பதில்லை அனைத்தும் ஓர்நாள் கடந்துபோகும், இங்கு யாவும் அனாதியே" என்ற உணர்வினை அடைபவரே... அது நீ ஆகிறாய் எனும் மெய்யுணர்வின் புனித ஆத்ம நிலையின் உத்தமன் ஆகிறார். இந்த நிலையை அடைந்தவரே இப்பூவுலகில் புண்ணியராக அவதரிக்கிறார். நீயே இறைவன் என்ற தத்துவத்தை தெளியவைப்பதே அசிபதம். இந்த முப்பதங்களின் தத்துவத்தை உணர்ந்து, இவ்வுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் இறைவனே... அவர்களுக்கு தொண்டு செய்வதே இப்பிறப்பின் பயனாகும் என்று எந்த பலனையும் எதிர்பார்க்காமல் தன்னால் முடிந்தவரை அறநெறியின் அறிவுப் பாதையில் அன்புள்ளத்தோடு அழைத்துச் சென்று தீய உள்ளங்களையும் நல் உள்ளங்கலாக மாற்றி, பேதையர்களின் அறியாத் தன்மைகளை நீக்கி அறிவுடையோர்களாக ஆக்கி, உயர்வு தாழ்வு என்ற பேதமை அழித்து சமத்துவத்தை போதித்து, உழைப்பே உயர்வு தரும் எனற தத்துவத்தின் மகத்தான சக்தியை உலகுக்கு எடுத்துரைக்கும் சீவனே பரனாகும் சிவனே. சிவன் பூதங்கள் ஐந்தையும் அடக்கியாள்பவன் ஆகவே பஞ்ச ரட்சகன் (பஞ்சாட்சரன்). அழிவில்லாதவன். காணவல்ல ஆதி நாயகன் கருப்பொருளாய் உருவாகி, நடுவான வாழ்க்கையுமாகி அந்தத்தின் முதலுமானவன். முக்காலம் கடந்து எக்காலமும் உலக உயிர்களில் ஒன்றாகி, இனத்தில் இரண்டாகி, மூன்றான உலகில் திசை நான்கையும் கொண்டு ஐந்தான பூதத்தை ஆறாய் விரித்து லோகம் ஏழிலும் எட்டு திக்கை அடக்கி ஒன்பது கோள்களையும் இயக்கி கீழும் மேலும் இரு திக்கை மறக்காமல் பற்றான மனித பிறப்பில் பத்தாகி இந்திரியங்கள் பதினொன்றில் புவனத்தின் பன்னிரு காலங்களிலும் மகேந்திரனாய் புறத்தோடு வாழும் புண்ணியன் அகத்தோடும் வந்து அருள் புரிகிறான்... என்பதை மெய்யறிவாக அனைவருக்கும் தெளிபடுத்துவது கடினமாக இருப்பினும், இதை கடமையாக கருத்தில் கொண்டு கட்டுரையாக்கப் பணிகிறேன்.

சிவன்

தொகு

பூதங்கள் ஐந்தையும் அடக்கியாள்பவன் ஆகவே பஞ்ச ரட்சகன் (பஞ்சாட்சரன்). அழிவில்லாதவன். காணவல்ல ஆதி நாயகன் கருப்பொருளாய் உருவாகி, நடுவான வாழ்க்கையுமாகி அந்தத்தின் முதலுமானவன்.

முக்காலம் கடந்து எக்காலமும்

உலக உயிர்களில் ஒன்றாகி,

இனத்தில் இரண்டாகி,

மூன்றான உலகில்

திசை நான்கையும் கொண்டு

ஐந்தான பூதத்தை

ஆறாய் விரித்து

லோகம் ஏழிலும்

எட்டு திக்கை அடக்கி

ஒன்பது கோள்களையும் இயக்கி

கீழும் மேலும் இரு திக்கை மறக்காமல்

பற்றான மனித பிறப்பில் பத்தாகி

இந்திரியங்கள் பதினொன்றில்

புவனத்தின் பன்னிரு காலங்களிலும்

மகேந்திரனாய் புறத்தோடு வாழும் புண்ணியன்

அகத்தோடும் வந்து அருள் புரிகிறான்...

என்பதை மெய்யறிவாக அனைவருக்கும் தெளிபடுத்துவது கடினமாக இருப்பினும், இதை கடமையாக கருத்தில் கொண்டு கட்டுரையாக்கப் பணிகிறேன்.

சுபஸ்ரீ--சுபஸ்ரீ ஸ்வாமிகள் (பேச்சு) 14:30, 20 அக்டோபர் 2013 (UTC)