சமூக செயற்பாட்டாளர், நிகழ்வு ஒழுங்கமைப்பாளர் மற்றும் ஊடகவியலாளர்.

கிளிநொச்சி பிரதேசமான பரந்தன் குமரபுரத்தில் பிறந்து பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் உயர் கல்வியையும் நிறைவு செய்தவர். யாழ்ப்பாணத்தில் முறைசாரா கல்வித்திட்டத்தில்  ஊடகத்துறையில் பயிற்ச்சிநெறியை நிறைவுசெய்தவர்.   யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் கணக்கியலும் நிதியியலும் துறையில் பட்டத்தை நிறைவு செய்து இலங்கை தலைநகர் கொழும்பில் மருந்தக வர்த்தக துறையில் ஈடுபட்டிருந்தார். 2002ம் ஆண்டிலிருந்து பிரித்தானியாவில் இலண்டனில் வாழ்ந்து வருகின்றார். 

2011ம் ஆண்டு முதல் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் WWW.KILIPEOPLE.ORG நிறுவனர்களில் ஒருவராகவும் செயற்பாட்டாளராகவும் தற்போது வரை இயங்கிவருகின்றார். 

2013ம் ஆண்டு முதல் வணக்கம் இலண்டன் WWW.VANAKKAMLONDON.COM எனும் இணையத்தளத்தினை இயக்கிவருகின்றார்.  

2014ம் ஆண்டு நாச்சியார் இவன்ஸ் WWW.NACHIYAREVENTS.COM பொது நிகழ்வு ஒழுங்கமைப்பு நிறுவனத்தை இவரது உறவினரும் நண்பருமான கரண் திரு உடன் ஆரம்பித்து பின்வரும் நிகழ்வுகளை நடாத்தியிருந்தார். 

2014ம் ஆண்டு உலக தமிழ் குறும்பட விழா (WORLD TAMIL SHORT FILM FESTIVAL) வெற்றி வானொலி மற்றும் கிளவுட் மீடியா வுடன் இணைந்து நடாத்தியிருந்தார்.

2015ம் ஆண்டு  இலண்டன் தமிழர் சந்தை (LONDON TAMIL MARKET - LTM) (2014ம் ஆண்டு ஆவணி மாதம் இலண்டன் தமிழர் சந்தை எனும் தமிழ் வர்த்தக கண்காட்சியை நடாத்துவதற்கு இருவரும் திட்டமிட்டு அதே ஆண்டு கார்த்திகை மாதம் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து 2015ம் 2016ம் ஆண்டுகளில் இலண்டன் தமிழர் சந்தை நடாத்தப்பட்டது. தொடர்ந்து பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் இலண்டன் தமிழர் சந்தை இன்றுவரை நடாத்தப்பட்டு வருகின்றது. பிரித்தானியாவில் தமிழர்களின் மிகவும் முக்கியமான நிகழ்வாக இன்றுவரை இலண்டன் தமிழர் சந்தை திகழ்கின்றது.  

2017ம் ஆண்டு வேர்ல்ட் டிரக்டரி யுடன் இணைந்து இலண்டன் ஷாப்பிங் பெஸ்டிவல் (LONDON SHOPPING FESTIVAL) பெருநிகழ்வை நடாத்துவதில் இணைந்திருந்தார்.    

 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சுப்ரம்_சுரேஷ்&oldid=2985121" இலிருந்து மீள்விக்கப்பட்டது