சுந்தரலிங்கம் அகரமுதல்வன் தமிழீழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பளையை பிறப்பிடமாகக் கொண்டவர். 2009ஆண்டு நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் சாட்சியாக அந்தக் களத்தில் இருந்து மீண்டு வந்தவர்.தற்போது தாயகத்தைக் கடந்து புலம்பெயர்ந்து வாழும் இவர் கவிதைகள்,கட்டுரைகள்,சிறுகதைகளை எழுதி வருகிறார். இவரின் அறம் வெல்லும் அஞ்சற்க எனும் கவிதைத் தொகுப்பு தமிழ்இலக்கிய உலகில் பெரும் கவனத்தை ஈர்த்தது மட்டுமில்லாமல் இனப்படுகொலையின் பின்னான இராணுவ வதைகளை சதையும் இரத்தமுமாக கூறி பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. டாங்கிகளில் சரியும் முல்லை நிலா என்கிற இவரின் நான்காவது கவிதைத் தொகுப்பு இன்னும் சில மாதங்களில் வெளிவரவுள்ளது.


வெளிவந்த நூல்கள்

தொடரும் நினைவுகள் அத்தருணத்தில் பகை வீழ்த்தி அறம் வெல்லும் அஞ்சற்க


விருதுகள்

அத்தருணத்தில் பகை வீழ்த்தி

கலகம் தமிழ்தேசிய கலைத்தட விருது (2013)

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது (2013)

ஈரோடு தமிழன்பன் விருது (2014)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சு.அகரமுதல்வன்&oldid=1861273" இலிருந்து மீள்விக்கப்பட்டது