செங்கான் கார்முகில்
செங்கான் கார்முகில் (எழுத்தாளர்) - கவிஞர்.சிறுகதை எழுத்தாளர்.மானுடவியல் கட்டுரையாளர். சென்னை தரமணியிலுள்ள சி.ஐ.டி யில் நெசவியல் தொழில்நுட்பம் படித்தவர்.எழுத்து ஆர்வத்தால் 'பகவதி சன்னதி' எனும் ஆன்மிகப் பத்திரிகையில் அலுவலக உதவியாளராகத் தொடங்கி குமுதம்,புதியபார்வை இதழ்களில் உதவி ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார்.பல்சுவை காவியம் இதழில் துணையாசிரியராக இருப்பவர்.தமிழத்தின் வெகுஜன மற்றும் சிற்றிதழ்கள் பலவற்றில் இவரது படைப்புகள் பிரசுரமாகியுள்ளன.
'பிறப்பு:'
மத்திய தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் கேட் வட்டத்திலுள்ள காரை எனும் சிறுகிராமத்தில் மேலத்தெருவில் 1976 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி கூலி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த செங்கான் ஆறுமுகம் - மாணிக்கம் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.ஒரு தம்பி செளந்தரராஜன்.ஒரு தங்கை பூங்கொடி மலையம்மாள்.
கல்வி:
ஆரம்பக் கல்வியை சொந்த ஊரான கா ரையிலுள்ள அரசு ஆரம்பப் பள்ளியிலும், அதே ஊரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை பள்ளிக் கல்வியையும் முடித்து,உயர்கல்வியாக சென்னை மத்திய தொழில் நுட்ப மையத்தில் நெசவியல் படித்தார்.
பணி:
எழுத்து ஆர்வத்தின் காரணமாக படிப்பிற்கு ஏற்ற வேலையைத் துறந்து பகவதி சன்னதி எனும் பத்திரிகையில் அலுவலக உதவியாளனாக சேர்ந்தார்.பின் அங்கிருந்து குமுதம் பத்திரிகையில் அதே வேலைக்கு சேர்ந்தார்.அவரது எழுத்தைக்கண்ட குமுதம் ஆசிரியர் (ராவ்)குழு அவருக்கு உதவி ஆசிரியர் பிரிவில் பயிற்ச்சியளித்தது. உதவி ஆசிரியராக பணியைத்தொடங்கினார். பின் புதியபார்வை இதழ், பல்சுவை காவியம் இதழ் என பத்திரிகையில் பணியைத் தொடர்கிறார்.
படைப்புகள்:
1.கிராமங்கள் பேசுகின்றன (மானுடவியல் கட்டுரைத் தொகுதி, சந்தியா பதிப்பக வெளியீடு) குமுதம் ஜங்சன் இதழில் தொடராக வெளிவந்தது. முரண்களரி இலக்கிய அமைப்பினர் நடத்திய நூல்கள் விமர்சன் அரங்கில் எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தால் விமரிசையாக விமர்சிக்கப்பட்டு பாராட்டப்பட்டது.
இதுதவிர 15 சிறுகதைகளும் 2 குறுநாவல்களும்,கிராமத்துப் பின்புலத்தில் ஏராளமான கவிதைகளும் எழுதியுள்ளார். இவை கதைசொல்லி,குமுதம்,புதியபார்வை,குமுதம்.காம், கல்கி,பசுமை விகடன், மணல்வீடு,செம்மலர்,நந்தன்,சாளரம்,தீக்கதிர்முதலான இதழ்களில் பிரசுரமாகியுள்ளது.