பெயர்: செ.இளங்கோவன், பொள்ளாச்சி.

தொழில்: வழக்குரைஞன். தமிழ் ஆர்வலன்.

விக்கிபீடியாவைப் பல ஆண்டுகளுக்கு முன் தேடல் பொறிமூலம் பாரக்க நேர்ந்தது. ஒரு கலைக்களஞ்சியத்தின் தொகுப்பாளராக (எடிட்டராக) நாம் இருக்க முடியும் என்ற எண்ணமே மனக்கிளர்ச்சி தந்தது. சில பல பங்களிப்புகளைச் செய்தாலும் இன்றைப்போல எளிய முறையில் தொகுத்தலைச் செய்யமுடியவில்லை. இப்போது மீண்டும் விக்கிபீடியா ஈர்த்துள்ளது. இப்போதைய காரணம் வேறு. ஒரு பொருள் குறித்த பிழையான, திரிபான தகவல்களைக் கொண்டிருந்த விக்கிபீடியா கட்டுரையை அடிப்படையாக வைத்து ஓர் இணையக் கட்டுரையைப் படித்தபொழுது அதிர்ந்தேன். துறைசார்ந்தவர்கள் பங்களிக்காதபோது விக்கிபீடியா தவறான கருத்துப்பதிவுகளை இளந்தலைமுறையினர் நடுவே, ஆய்வாளர்கள் நடுவே ஏற்படுத்திவிடக்கூடும் என உணர்ந்தேன். எனக்குத் தெளிவாகத் தெரிந்த விடயங்களை விக்கிபீடியாவில் பங்களிக்காமலிருப்பது மிகவும் தவறானது எனப் புரிந்தது. எனவே, உருப்படியாகப் பங்களிப்புகளைச் செய்ய உத்தேசித்திருக்கிறேன் இந்த முறை. :)

ilangovanbabl@gmail.com