பயனர்:ச.மணிவண்ணன்/மணல்தொட்டி


https://www.psychologytoday.com/us/blog/in-practice/201304/10-essential-emotion-regulation-skills-adults

உணர்வுகளின் ஒழுங்கியல் திறன்கள்

பொதுவாக மனிதர்கள் தமது உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருப்பதில்லை என்ற கருத்து உளவியளாளர்களிடையே உள்ளது. நமது உணர்வுகள் பெரும்பாலும் நம்மைச்சுற்றி நிகழும் நடவடிக்கைகளைக் கொண்டே முடிவு செய்யப்படுகின்றன. இதுே போன்ற சூழ்நிலைகைளயும், காட்சிகளையும் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், புத்தகங்கள் மற்றும் தற்போதுள்ள முகநுால் போன்ற பல்லுாடகங்கள் மூலமாக நாம் அறிந்து கொள்ள இயலும். உலகெங்கும் இத்தகைய சூழ்நிலைகளே மனிதர்களை ஆட்கொண்டிருப்தை காணமுடிகிறது. நமது உணர்வுகள் பெரும்பாலும் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்பதே உண்மையாகும். நமது உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்கும் திறனை உணர்வுகளின் ஒழுங்கியல் திறன்கள் என அறியலாம். இத்தகைய உணர்வுகளை கட்டுப்படுத்தும் திறனுக்கு பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து பயிற்சி எடுக்க வேண்டுவது அவசியமற்றதாகும். சமுதாயப் பொறுப்புணர்வுடன் வளர்ந்துவரும் ஆண் பெண் இருபாலருக்கும் இந்த கட்டுரை பயன் அளிக்கும்.

வளர்ந்தவர்களுக்குத் தேவையான ஒழுங்கியல் திறன்கள் கீழ்காணும் பத்து ஒழுங்கியல் திறன்கள் தனிமனித உறவுகளை சிறப்பாக பேண விரும்பும் அனைவருக்கும் பொருந்தும்.

1.மனிதரது உணர்வுகள்

ஒருவரது உணர்வுகள் பொறாமை குணம் கொண்டதா அல்லது பயம் கலந்ததா என்பதை முதலில் கண்டுபிடித்தல் வேண்டும். உணர்வுகள் என்பது மனிதரின் எண்ண ஓட்டங்கைள வெளிக்காட்டும் கருவி எனலாம். இதன் விளைவுகள் சம்பந்தப்பட்டவரை சில நிகழ்வுகளில் வெட்கித் தலைகுனியச் செய்துவிடுவதுண்டு.

2. உணர்வுகைள துல்லியமாக கண்டு பிடித்தல்

நம்முடன் பழகும் உறவுகளின் மனநிைலைையக் கண்டுபிடித்தல் நலம். இதன் பலனாய் நம்முடன் பழகும் அனைவரிடமும் நல்ல முறையில் பழக ஏதுவாய் இருக்கும்.

3. இலக்குகளுக்கு இட்டுச்செல்லும் உணர்வுகள்

நமது உணர்வுகேள நமது இலக்குகளையும் அன்றாட பணிகளையும் திட்டமிட்டபடி நடத்த உதவுகின்றது. உணர்வுகளை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் நமது இலக்கு நோக்கிய பயணம் தெளிவாக அமையும்.


4.தவறுகளை பொறுத்துக் கொள்ளும் திறன்

மனிதர்கள் தவறு செய்தல் இயற்கை என்ற எண்ணம் வேண்டும். இந்த திறன் மற்றவர்கள் தவறிழைக்கும் போது அவர்களை சரியான முறை

3. இலக்குகளுக்கு இட்டுச்செல்லும் உணர்வுகள்

நமது உணர்வுகேள நமது இலக்குகளையும் அன்றாட பணிகளையும் திட்டமிட்டபடி நடத்த உதவுகின்றது. உணர்வுகளை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் நமது இலக்கு நோக்கிய பயணம் தெளிவாக அமையும்.

4.தவறுகளை பொறுத்துக் கொள்ளும் திறன்

மனிதர்கள் தவறு செய்தல் இயற்கை என்ற எண்ணம் வேண்டும். இந்த திறன் மற்றவர்கள் தவறிழைக்கும் போது அவர்களை சரியான முறையில் ஆலோசனைகள் கூறி நெறிப்படுத்த உதவும்.

5.உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். உணர்வுகளை உள்ளடக்காமல் உரையாடித் தீர்க்க வேண்டும். மற்றவர்கள் மாற்றுக் கருத்து கொண்டிருந்தால் அவர்களுடன் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பது நல்ல பலைனத் தரும்.

6.மற்றவர்களின் துாண்டுதல்களுக்கு அடிபணியாமை

மற்றவர்கள் தங்களது கருத்துகளை திணிக்க இடம் கொடுக்காமல் இருத்தல் நலம் பயக்கும். இதனால் நமது இலக்கு நோக்கிய பயணம் தடையின்றித் தொடரும். எடுத்துக்காட்டாக ஒரு வணிகர் தம்மிடம் உள்ள பொருட்களை நம்மிடம் திணிக்க இடமளிக்கக் கூடாது. நமது தேவைகளை மட்டுமே வாங்கும் மனநிலை வேண்டும்.

7.நமது உணர்வுகளை அடக்கும் திறன்.

நாம், நான் போன்ற எண்ணங்கள் பெரும்பாலானவர்களின் தோல்விகளுக்கு பாலம் அமைத்துவிடுவதுண்டு. மற்றும் நாம் சரியாக இருக்கிறோம், மற்றவர்கள் தவறு செய்பவர்கள் என்ற எண்ணம் இருத்தல் நமது இலக்கு அடைதலுக்கு தடையாக இருக்கும். எனவே நமது உணர்வுகளுக்கு இடம் தராமல் சரி எது, தவறு எது என்பனவற்றை சீர்துாக்கிப் பார்க்கும் நிலை வாழ்க்கைப் பயணத்தில் நல்ல முடிவுகளையும் இறுதியில் நல்ல வெற்றிகளையும் தரும்.

8.மற்றவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்தல்.

சோர்வைடந்த மனநிலையில் நம்முடன் இருப்பது இயல்பாகும். அத்தகைய சூழலில் அவர்களது எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பது சிறந்த பலனை அளிக்கும். அவர்களது சோர்வினை களைந்து உற்சாகப்படுத்துதல் நமது இலக்கினை அடைய ஏதுவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


9.காத்திருத்தல் பலன் தரும்

காலம் கனியும் வரை காத்திருப்பதில் தவறில்லை. சில பிரச்னைகளுக்கு காலம் சிறந்த மருந்தாக அமைவதுண்டு. எனவே நல்ல சூழல் வரும் வரை காத்திருந்து திட்டங்களை செயலாக்கம் செய்வது வெற்றிக்கு வித்திடும்.

10. நேர்மறை எண்ணங்கள் பலன் தரும்.

நேர்மறை எண்ணங்கள் கொண்ட மனிதர்களே வாழ்வின் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். எனவே எதிர்மறை எண்ணங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு நேர்மறை எண்ணங்களுடன் வாழ்க்கைப் பயணத்தினை தொடர்தல் நலம் பயக்கும்.

இதனையே வள்ளுவப் பெருந்தகை " உள்ளத் தனைய மலர்நீட்டல் மாந்தர்க்கு

 எண்ணத் தனைய உயர்வு" என்கிறார். 

குளத்தில் நீர் உயர உயர அந்த குளத்தில் உள்ள தாமரை, அல்லி போன்ற மலர்கள் எப்படி நீர் உயரும் போது அதன் போக்கில் மேல் எழுகிறதோ அது போலவே மனிதர்களின் எண்ணங்களைப் போலேவே அவர்களது செயல்களும் இருக்கும்.

உணர்வுகளே வாழ்க்கையின் அடித்தளம்

மனிதனது உணர்வுகளும், எண்ணங்களும் அவரவரது வாழ்க்கைப் பயணத்தினை முடிவு செய்கின்றன. நல்லன நினைக்க நல்லன நடக்கும். எனவே நல்லனவற்றை நினைத்து நல்லனவற்றை திட்டமிட்டு செயலாற்றினால் வெற்றிப் பயணம் ஒவ்வொருவரது வாழ்விலும் தடைபடாமல் நடைபெறும் என்பதில் ஐயமில்லை.