ஜப்பானில் தமிழ் மொழியையும் தமிழர் பண்பாட்டையும் தமிழ் மக்களிடையே பாதுகாப்பதும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழை தொய்வின்றி கொண்டு செல்வதும் என்பதே ஜப்பான் தமிழ்ச் சங்கத்தின் நோக்கம்.

செயல் திட்டங்கள்

தொகு

ஜப்பானில் உள்ள தமிழ்மக்களுக்கும் தமிழ் மொழிக்குமான தொடர்பை பாதுகாக்கும் விதமாக,

  1. நம் அடுத்த தலைமுறையான குழந்தைகளுக்கு தமிழைப்படிக்க ஊக்குவிப்பது மற்றும் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது.
  2. ஜப்பானில் உள்ள பள்ளிகளில் தமிழ் நூலகங்கள் அமைக்க உதவி புரிவது.
  3. குழந்தைகளிடம் தமிழார்வத்தையும் தலைமைப்பண்புகளையும் வளர்க்கும் விதமாக பள்ளிகளுக்கிடையேயான தமிழ்ச்சார்ந்த போட்டிகள் நடத்துவது.
  4. நம் பண்பாட்டை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் விதமாகவும் முத்தமிழையும் காக்கும் விதமாகவும் இங்குள்ள நம் தமிழ் உறவுகளுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்துவது.
  5. தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை பரப்புதல், போற்றுதல்.
  6. தமிழ் நாட்டிற்க்கு வெளியே வாழும், தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத தமிழர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்றுக்கொடுத்துத் தமிழை தழைத்தோங்கச் செய்தல்.
  7. தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்தல் ஆகிய பணிகளும், மற்றும் சமூகப் பணிகளும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

தொகு

ஜப்பான் தமிழ்ச் சங்கம் இணையத்தளம்