ஜி.ஜே.தமிழ்ச்செல்வி
ஜி.ஜே.தமிழ்ச்செல்வி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் பிறந்தவர். பெற்றோர் கோவிந்தராஜி, ஜாய் செல்வக் குமாரி. http://vinmugil.blogspot.in என்ற பெயரில் வலைப்பூ (blog) எழுதி வருகிறார். மாற்றுத் திறனாளிகளுக்கென இதயத்துடிப்பு (Heart Beat) சேவை நிறுவனம் நடத்தி வரும் இவர் மாற்றுத்திறனாளிகளுக்கென அடிப்படை வசதிகள் கொண்ட தொழில் நிறுவனம் ஒன்றை உருவாக்குவதை இலட்சியமாகக் கொண்டுள்ளார். இவர் ஒரு மாற்று திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. இரு மாற்று திறன் கொண்ட சிநேகிதிகளாலும் மற்றும் ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியை .திருமதி. ஜாய் செல்வக் குமாரி அவர்களாலும் நிறுவப்பட்டது. இதயத் துடிப்பு சேவை நிறுவனம் ஆகும்.
சமீபத்தில் இவரது “இது நிகழாதிருந்திருக்கலாம்” கவிதைத் தொகுப்பு தாரிணி பதிப்பகம் திரு.வையவன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. கவிதைத் தொகுப்பு கிடைக்குமிடம்
படைப்பு ;- ஜி. ஜே. தமிழ்ச்செல்வி தாரிணி பதிப்பகம், ப்ளாட். எண் 4-ஏ ரம்யா பிளாட்ஸ் 32/79 காந்தி நகர் 4வது பிரதான சாலை, அடையார் – சென்னை-600020 இந்த விலாசத்தில் கிடைக்கும். vaiyavan.mspm@gmail.com