'இவர் கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா..


இயற் பெயர் பாரதி.பிறந்த ஊர்,மனைவி பெயர்,மகளின் பெயர் மூன்றையும் இவரது பெயரின் இருபுறமும் கோர்த்துக்கொண்டு 44 ஆண்டுகளாக எழுதி வருகிறார்.பிறப்பு கரடிகுளம் கிராமம்.தந்தையார் மிகச்சிறந்த புகழ் பெற்ற நாதஸ்வர கலைஞர் கரடிகுளம் V M.சம்பாரி அவர்கள் பள்ளிப்படிப்பு உயர்நிலைப்பள்ளி கழுகுமலை.பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி. முதுகலைப் பட்டம் மதுரை பல்கலைக் கழகம்.வேலை- தேசிய மயமாக்கப்பட்ட ஒரு பெரிய வங்கியின் திருநெல்வேலி கிளையில் அதிகாரி.

முதல் இருபதாண்டு காலம் தாமிரபரணிக் கரை அடுத்த இருபதாண்டு காலம் காவிரிக்கரை அடுத்த பத்தாண்டு காலம் சென்னையில் வாழ்ந்தும் பாசம் என்னவோ காந்தமாக தாமிரபரணியை நோக்கியே இழுத்து வந்து விட்டது போல.தற்போது வாசம் திருநெல்வேலி மஹாராஜநகர்.பாளையம்கோட்டை

எழுதியவைகள்- தமிழில் வெளிவந்த அனைத்து வார மாத நாளிதழ்களிலும் சுமார் 15௦௦௦ நகைச்சுவைத்துணுக்குகள்,450 ஒருபக்கச்சிறுகதைகள்,15௦௦ க்கும் மேற்பட்ட கவிதைகள்,வங்கிப் பணிகளைப் பற்றிய கட்டுரைகள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட வாழ்க்கை முன்னேற்ற சமூக கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இவை அனைத்தும் மணிமேகலை பிரசுரம் ,நர்மதா பதிப்பகம்,சுராபுக்ஸ், நற்பவிபிரசுரம்,போன்ற முன்னணி பதிப்பகங்களால் தொகுக்கப்பட்டு 22 புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

நாவலாசிரியர் ஒருவர் இவரது படைப்புகளை மதுரை பல்கலையில் ஆய்வு செய்து M Phil பட்டம் பெற்றுள்ளார். மற்றபடி வானொலி,நாடகங்கள்,டிவி,சினிமா போன்ற ஊடகங்களிலும் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. மகள் மருத்துவ அதிகாரி,மகன் இவர் பணிபுரியும் அதே வங்கியில் பணிபுரிபவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ஜெயாபாரதிப்ரியா&oldid=3857369" இலிருந்து மீள்விக்கப்பட்டது