ஜோசப் ஜெயபால்
Joined 10 செப்டெம்பர் 2015
திருவள்ளுவர் இரண்டடி ஆசான் இருந்தான் அன்றொரு நாள் ஏழடி சீர் படைத்து மானிடத்தை ஏற்றம் பெறச் செய்தான் தாடியுடன் வார்த்தை வேள்விகளைச் செய்து மனித மனங்களை கசக்கிப்பிழிந்த கொல்லன் அவன் அறம் பொருள் இன்பம் என்ற மூன்று இயலையும் குறையாத சுவையோடு பந்திவைத்தப் பகுப்பாளன் ஏடில்லா காலத்திலே எழுத்தானி கொண்டு ஓலைச்சுவடியில் வரிகளை வடித்த வார்த்தை வித்தகன்… அரசலையும், புரசலையும் அரசியலையும், அறிவியலையும் அன்றே அறிவுக்கு கிட்டச் செய்த ஆய்வாளன் அவன்… வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என புதுவைக்குயில் புதிய சரித்திரம் படைத்த சிம்ம சொப்பனமே… காலங்களைக்கடந்து நிற்கும் கருத்து குவியல்களை கண்ணோடு ஒத்தியெடுக்க- இரு கண்களும், கரங்களும் போதாதே…