எனது அன்பின் பெரம்பலூர் வாழ் குடியுரிமை வாழ் அன்பு மக்களே! வாழ்க நமது மொழி, வளர்க்க! நமது வாழ்வியல் கலாசாரம்,  நீடுடி நிலைக்கட்டும் நமது பிறந்த நமது தமிழ் பூமி.

அன்பு பெரம்பலூர் வாழ்வியல் அன்பர்களே !

உங்களிடம் ஓர் கலந்துரையாடல் .

அன்பர்களே ! நமது பூமி எனக்கு தெரிந்தவரை பெரம்பலூர்  வானம் பார்த்த பூமி தான்.

இங்கு அனைத்து  வாழ் மக்களும் விவசாய பெரும் மக்கள்தான் .

வானம் சிரித்தால் தான்  நமது மண் மகிழ்ச்சியில் விதையுடன் புணரும் ,நமது விவசாய மக்களின் உழைப்பு நிமிரும் ,நமது வயறு குளிரும் .

ஆனால் இன்று பருவத்தின் பொய்ப்பாலும் மனிதமில்லா மனிதர்களின் ஏய்ப்பாலும் நமது விவசாயம் உளுத்துப்போய் விட்டது.

நமது விவசாய பூமி எல்லாம் அரசியல் ஆதிகாரங்களால் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்து விவசாய பெரும்மக்களை  கொலை செய்து விட்டார்கள் .

நமது விவசாய நிலங்களெல்லாம் பெரும் பன்னாட்டு முதலைகளின் வாயில் இரையாய் . ஆனால் விவசாய மக்களின் வாழ்வியலோ அதற்கு மேலும் இரையாய்.

நமது பூமியில் நமது வாழ்வியலும், உரிமைகளும் பறிபோய் விட்டன.

அரசியல் அதிகாரமும்,தனியார் குள்ளநரிகளும் ,பன்னாட்டு முதலைகளின் வாயிலும், நமது ஊரும் நமது மக்களின் வாழ்வியலும் சிக்கி சிதைக்கப்படுகின்றார்கள் .

நமது விவசாய பெருங்குடி மக்களெல்லாம் இன்று அவர்களிடம் கூலி தொழில் செய்யும் அவலத்தையும் . தனியார் நிறுவனங்களின் அடிமை    ஒப்பந்தத்தையும் , ஏற்று வாழ்வியல் செய்யும் அவலத்தை பார்க்கும் பொது நமது இதயம் இரத்தம் வழிகின்றது.

அன்பு மக்களே ! ஒன்றை மட்டும் சொல்கின்றேன் .

இனி நமது பூமி தழைத்து ஓங்க விதைக்க வேண்டும்

உங்கள் அரசியல்   உரிமைகளை , அதுதான் நமது வாழ்வியலையும்  நமது வம்சத்தின் வாழ்வியலையும் ஓங்கிய விருசமாய் வளரச்செய்யும்.

ஆதற்கு உங்களின் ஓட்டுரிமையை விலை நிர்ணயம் செய்யாமல் ,

உண்மைக்கு உண்மையாலும் விதைக்க வேண்டும் .

அதுவே விருசமாகும் படர்ந்து , அதன் நிழலில் நாம் இளைப்பாறுவோம்  எல்லா இன்பமும் பெற்று .

வணக்கம் .