உலகத் தமிழர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

என் பெயர் தமிழ்தாசன். நான் சராசரித் தமிழர்களில் ஒருவன். சமீபத்தில் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 14-வது தமிழ் இணைய மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். மாநாட்டில் உரையாற்றிய பேராளர்களும் ஆய்வாளர்களும் மிகத்திறம்பட தத்தம் கருத்துக்களை எடுத்துக் கூறினர். இங்கு உரையாற்றிய, இங்கிலாந்தைச் சேர்ந்த பேராளர் திரு விக்னேஷ் ராஜ் கூறிய கருத்தினையொட்டி,எனக்குத் தோன்றியதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தமி்ழ்த் தட்டச்சுக்குத் தமிழ் எழுத்துக்களின் அடிப்படையிலான தனித்தமிழ் விசைப்பலகை உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் ரோமன் எழுத்துருக்களைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி தமிழ் இணைய மாநாட்டில் பேராளர் திரு விக்னேஷ் ராஜ் பேசினார்.

தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சி வேகம் நாம் அறிந்ததுதான். கணினியில் செய்வதையும்/செய்யமுடியாததையும் சேர்த்து கைப்பேசியில் எளிதாகவும் விரைவாகவும் செய்து முடிக்கலாம். மேலும் இரண்டு கைப்பேசிகள் வைத்துக் கொள்ளாத இளைஞர்கள் இன்று இல்லை என்றே சொல்லலாம்.

தற்போது தமிழர்கள் தமிழில் பேசுவதும் படிப்பதும் குறைந்து கொண்டேதான் வருகிறது. ஆனால் எழுதுகிறார்கள். கைப்பேசிகளின் மூலம் குறுஞ்செய்தி அனுப்பவது, திரைப்படப் பாடல்களை எழுதிக்கொள்ளுவது, தமிழ்ப் பாடங்கள் படிப்பது போன்ற அளவில் எழுத்துப் பயன்பாடு கூடிக்கொண்டே போகிறது. இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


பேராளர் திரு விக்னேஷ் ராஜ் கூறியது போன்று தமிழ் விசைப்பலகை அவசரகாக உருவாக்கப்பட வேண்டியது அவசியம். இதே எண்ணம் உலகத் தமிழர்கள் பலரிடையே இருக்கும். அதற்காக நம்பிக்கையுடன் காத்துக் கொண்டு கூட இருக்கலாம். அந்த நம்பிகை வீண் போகாது. காரணம் இதற்காக, மிகச்சுலபமாக உபயோகிக்கக்கூடிய, "தட்டச்சுக்கான புதிய எழுத்தமைப்பு முறை" என் கைவசம் உள்ளது.

புதிய எழுத்து முறை என்றவுடன், நான் ஏதோ புதிதாகக் கண்டு பிடித்துசொல்கிறேன் என்று தயவுசெய்து தவறான முடிவுக்கு வந்து விடாதீர்கள். நம் தமிழே தன்னிச்சையாக முன்வந்து உதவி செய்து நம்மை காலகாலமாகக் காப்பாற்றிக்கொண்டு வந்திருக்கறது. ஆனால் ஆறறிவிருந்தும் நாம்தான் சிந்தித்துச் செயல்படாமல் வீண் விதண்டாவாதம் பேசி மண்ணுக்கும் தமிழுக்கும் பாரமாக இருந்து வருகிறோம்.

இப்போது நாம், "கற்போம்-கற்பிப்போம்" என்பதற்கு மூலாதார அடிப்படையான "தமிழ் அரிச்சுவடி" பற்றி சற்று ஆராய்வோம். -நீங்கள் என்னைத் திட்டுவது எனக்குக் கேட்கிறது- ; தமிழ் விசைப்பலகை உருவாக்கத்திற்கும் தமிழ் அரிச்சுவடி ஆராய்ச்சிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? என்பதுதானே திட்டலுக்குக் காரணம். இதோ எனது தற்காலிக பதில்:

                             " தட்டுங்கள்  > திறக்கப்படும்
                                திட்டுங்கள் > விளக்கப்படும்  
                                                                                                          (மீண்டும் வாசிப்போம்)   

நன்றி,வணக்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தமிழ்தாசன்&oldid=1869086" இலிருந்து மீள்விக்கப்பட்டது