தா.லாவண்யா
Joined 20 ஏப்பிரல் 2017
ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் பெண்கள் அனைவரும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு விடயம், வளையல் அணிவது ஆகும். ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு அழகு. பெண்கள் விரும்பி அணியும் அணிகலன் தான் வளையல். திருமணம் நாட்களில் அலங்கார வளையல்களுக்கு முக்கிய இடம் உண்டு. அதற்கு அடுத்த படியாக வளையலை வைத்தே ஒரு விழா எடுப்பர். அதற்கு பெயர் தான் வளைகாப்பு விழா. திருமணம் முடிந்து பெண் கர்ப்பம் தரித்து ஏழாவது மாதம் அவளையும், அவள் வயிற்றில்வளரும் குழந்தையையும் மகிழ்விக்க எடுக்கப்படும் பாரம்பரிய விழா இதுவாகும். அந்நாளில் அப்பெண்ணை அலங்காரம் செய்து கைகள் நிறைய வளையல்கள் அணிவிப்பார்கள். அதிலும் கண்ணாடி வளையல் தான் சிறப்பு. அந்த வளையல்கள் உரசும் வேளையில் எழும் ஓசையினை வயிற்றின் உள்ளே இருக்கும் குழந்தையின் காதில் விழுந்து திரும்ப வைக்கும் மறைமுக மருத்துவம் ஆகும்.