தினேசு குமார்
கதைச் சுருக்கம்:
கதாநாயகன் ஸ்ரீ குமார் ஒரு அப்பாவி. ஐடி கம்பெனியில் வேலை செய்யும் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவன். கதாநாயகி சிந்துஜா பணக்கார மற்றும் சுதந்திரமான, எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் பெண். பக்கத்து அலுவலகத்தில் வேலை செய்து வந்த சிந்துஜாவ ஜன்னல் வழியாக காதல் செய்த ஸ்ரீ குமாருக்கு ஒரு நாள் அதிர்ச்சியாக தனது அருகிலேயே தனது அலுவலகத்தில் வந்து சேர்ந்தார் சிந்துஜா. காதலை சொல்ல தடுமாறும் ஸ்ரீ, சிந்துஜாவோ அவனை கிளப்புக்கு இயல்பாக கூட்டி செல்கிறார். இப்படியாக ஒரு நாள் இருவருக்குள்ளும் அன்பு அதிகமாகி, உடலுறவு வைத்துக் காெள்ளும் அளவிற்கு செல்கின்றனர். அந்த நேரத்தில் காதலிப்பதாக ஸ்ரீ சொல்ல, அதை மறுத்து இது நமக்குள் நடந்த சாதாரண உணர்வு தானே தவிர வேற ஒன்னும் இல்ல என்று சிந்துஜா சொல்ல தன்னால் தாங்க முடியாத ஸ்ரீ அழுகிறார்.
தனக்கான இலட்சியம் குறிக்கோள்கைள அடையும் வரையில் காதலோ, கல்யாணமோ, குழந்தையோ கிடையாது என்பதில் சிந்துஜா உறுதியாக இருந்தார். தாய்ப்பாசத்தில் தவித்த ஸ்ரீ அம்மா சொன்ன பெண்ணை திருமணம் செய்ய, மூன்று ஆண்டுகளிலேயே அவர்களுக்குள் விவாகரத்தும் ஆகிறது. இந்த மூன்று இடைவெளியில் தன்னுடைய இலட்சியங்களை அடைகிறார் சிந்துஜா. ஸ்ரீ-க்கு விவாகரத்து ஆனதை அறிந்த சிந்துஜா, மகிழ்ச்சியோடு ஸ்ரீ-யுடன் இணைந்து தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறார். ஸ்ரீ வீட்டிலும் நிச்சயத் திருமணத்தை விட, சிந்துஜா எதிர்பார்த்த லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை முறையே சரியானது என வரவேற்றனர். இப்படியாக கதை முடிகிறது.
நடிகர்கள்:
ரெய்சா வில்சன் - சிந்துஜா
ஹரிஸ் கல்யாண் - ஸ்ரீ குமார்
ஆனந்த் பாபு - சிந்துஜாவின் அப்பா
பாண்டியன் - ஸ்ரீ குமாரின் அப்பா
ரேகா - ஸ்ரீ குமாரின் அம்மா
ராமதாசு - டெய்லர் தங்கராஜ்
சுப்பு பஞ்ச்சு - மேனேஜர்
தயாரிப்பு:
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா-வின் முதல் தயாரிப்பு இப்படம். அவரும் ராஜராஜனின் கே தயாரிப்பு நிறுவனமும் இணைந்து பியார் பிரேமா காதலை இயற்றினர்.
இசை:
இப்படத்தை தயாரித்த யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். விவேக் மற்றும் மோகன் ராஜா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
வெளியீடு:
ஆகஸ்ட் 09, 2018 அன்று வெளியிட இருந்த இப்படம், சில நாள் முன்பு தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் மரணமடைந்ததை அடுத்து, படமானது ஆகஸ்ட் 10 அன்று வெளியிடப்பட்டது.
விருதுகள்:
சிறந்த அறிமுக விருதை கதாநாயகி ரெய்சா வில்சனுக்கு ஆனந்த விகடன் சினிமா விருதுகள் மூலம் வழங்கப்பட்டது.
ஆண்டின் சிறந்த குரலுக்கா சித் ஸ்ரீராம்-க்கு பிகைன்ட் வுட்ஸ் சார்பில் விருது வழங்கப்பட்டது.