கடலூர் மாவட்டம் கணபதி குறிச்சியில் 1968 ஆம் ஆண்டு தியாகராஜன் ஞானசௌந்தரி இணையருக்குப் பிறந்த தியாக இரமேஷ் பள்ளிக்கல்வியை நல்லூர்விருத்தாசலம் பள்ளிகளில் பயின்றார். பட்டயப்படிப்பினை சேலம்தொழில்நுட்பக்கல்லூரியில் முடித்து பல்வேறு நிறுவனங்களில் பொறியாளராகப்பணியாற்றி தற்போது சிங்கப்பூர் ரோட்டரி நிறுவனத்தில் வடிமைப்புப்பொறியாளராகப் பணியாற்றிவருகிறார்.

           சேலத்தில கல்லூரியில் படிக்கின்றபோது சேலம் சூழலுமும் இயற்கைஎழிலும் ரமேஷை படைப்பாளியாக உருவாக்கின. இயற்கையை நேசிக்கும்குணமும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் மனமும் இவரதுதனித்தன்மைகள்.கவிதை, இலக்கியம், ஆன்மீகம், விளையாட்டு, பயணம்,சித்தமருத்துவம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். ஓவியம் வரைவது இவரதுபொழுதுபோக்கு.
                      கவிதை, படைப்பாளியையும் அவன் சார்ந்தவற்றையும்புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. நாம் எப்பொதெல்லாம் கவிதை எழுதுகிறோமோஅப்போதெல்லாம் நம்மோடு நாம் பொருந்தி இருக்கிறோம். என்று கவிதை குறித்தமதிப்பீடு உடைய இரமேஷ் இரண்டு கவிதை நூல்களைப் படைத்துள்ளார்.
           தமிழகத்தின் மணிமுத்தாறு, நடவு, களம்புதிது, ஆகிய இலக்கியஇதழ்களிலும் சிங்கப்பூரின் தமிழ் முரசு, சிராங்கூன் டைம்ஸ், தங்கமீன் (இணையம்) இதழ்களிலும் ம்ற்றும் இலங்காஸ்ரீ போன்ற இணைய இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளியாகி உள்ளன ..
           2004 ஆம் ஆண்டு வெளியான நூல் " அப்படியே இருந்திருக்கலாம் " இந்நூல்அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் முதுகலை  பட்டப் படிப்பிற்கு ஆய்வுக்குஎடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
           "நினைவுப்பருக்கைகள்" என்னும் கவிதை நூலினை (21-5--011)இவ்வாண்டு சிங்கப்பூரில் வெளியிட்டார்.சிங்கப்பூரில் இயங்கி வரும் கவிமாலை, கவிச்சோலை,இலக்கியச்சோலை, போன்ற இலக்கிய அமைப்புகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்றுவரும் இவர் தி சிராங்கூன் டைம்ஸ் என்னும் தமிழ் மாத இதழில் நிருபராகபணிய்யாற்றினார். தற்போது அவ்விதழ் இணைய இதழாகவெளிவருகிறது.சிங்கப்பூரில் நடபெறும் இலக்கிய நிகழ்வுகளை ஒளிப்படங்களாகஇணையத்தில் ஆவணப்படுத்தி வரும் இவர் முகநூல், வலைப்பூ வாயிலாகவும்இலக்கியப் பணியாற்றி வருகிறார். இவரது சிறப்பான இலக்கிய முயற்சிகளைஅங்கிகரிக்கும் வகையில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் செயலவைஉறுப்பினராக்கி பெறுமைப்படுத்தியுள்ளது.

தியாக இரமேஷ் நூல்கள்

            1.அப்படியே இருந்திருக்கலாம்
            2.நினைவுப்பருக்கைகள்
           தியாக இரமேஷின் கவிதைகள் வட்டார மொழியிலமைந்தவை. எளிதில்புரியும் 

நேரடித்தன்மை கொண்டவை. வாழ்வனுபவங்களின் வெளிப்பாடாகவும்.மனிததின் மீது கொண்ட அன்பாலும் இயற்கையின் மீது கொண்ட ஈர்ப்பாலும்உறுவானவை….

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தியாக.இரமேஷ்&oldid=1230125" இலிருந்து மீள்விக்கப்பட்டது