நான் தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டமான தருமபுரி மாவட்டம்,பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பேதாதம்பட்டி என்ற கிராமத்தை சார்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தை சார்ந்த வறுமை என்ன என்பதை உணர்ந்த ஓர் இளைஞன். நான் வருவாய்த்துறையில் தற்போது வருவாய் உதவியாளராக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறேன்.நான் என்னை பற்றி இத்தளத்தில் பதிவு செய்வதில் பெருமை அடைவதை விட என்னை போன்ற இளைஞர்களுக்கு ஊக்கமாக அமைய வேண்டும் என்பதற்காக இதை உங்களிடம் பகிர்கிறேன்.பள்ளி காலங்களில் பெரும்பான்மை பிள்ளைகளை போல் நானும் சராசரி மாணவனாக படித்தவன்.பத்தாவது அரசு பொதுதேர்வில் 409 மதிப்பெண்கள் பெற்றேன்.இன்றைக்கு இந்த மதிப்பெண் குறைவாக தோன்றினும் நான் படித்த 2000-2001 ஆம் வருடத்தில் எங்கள் ஊரில் படித்தவர்களில் நான் தான் முதல் மதிப்பெண்.இங்கு தான் நான் என் கணித ஆசிரியர் திரு.முருகன் ஐயா, அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். எத்தனை எத்தனை நாட்கள் நான் சரியாக படிக்கவில்லை என்று அவரால் வகுப்பறைக்கு வெளியே நின்று இருப்பேன் அதன் உந்துதலோ என்னவோ என்னை படிப்பு என்னும் பாதையில் அழைத்து சென்றது. பின் பனிரெண்டாம் வகுப்பில் 927 மதிப்பெண்கள் பெற்றேன். அன்று பொறியியல் படிப்புகளுக்கு அவ்வளவு மவுசு.ஆனால் எனது குடும்பத்தில் அதை படிக்க வைக்க போதிய வசதி இல்லை.பின் தருமபுரி அரசு கலை கல்லுரியில் வேதியியல் பாடத்தை விரும்பி தேர்வு டிசய்து படிக்கலானேன். முதல் வகுப்பி தேர்ச்சி பெற்ற எனக்கு அதன் பிறகு உன்ன படிப்பது என்ற போதிய அறிவு கூட இல்லாமல் இருந்தேன். பின் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து இளங்கலை ஆசிரியர் பட்டயம் பெற்றேன்.

வீட்டில் என்ன செய்வது என்று அறியாமல் இருந்த நான் சுயமாக எவ்வித பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லாமல் குருப்-2 தேர்ச்சி பெற்றேன்.இதுவரை எங்கள் ஊரில் தமிழ்நாடு வருவாய்துறையில் குருப்-2 மூலம் தேர்ச்சி அடைந்தவர் எவருமில்லை அந்த வகையில் நான் தான் முதல் ஆள் என்பதில் என்னை நானே சில சமயத்தில் சிலாகித்துக் கொள்வேன். குருப் 2 தேர்ச்சி அடைந்தது மட்டும் நில்லாது கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மற்றும் குருப்4 தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்தேன். இவை அனைத்திற்கும் காரணம் யார் என்பதை கூற மறந்திட்ட பாவியாக இருக்க மாட்டேன். வேறு எவரும் இல்லை என்னை ஈன்றெடுத்த அன்னை பழனியம்மாளும், என்னை இந்நிலை உயர இரத்தத்தை வியர்வையாய் சிந்திய என் ஆசான் என் வழிகாட்டி தந்தை நடராஜன் என் தமையன் திருஞானம் என் நண்பன் அண்ணாமலை ஆகிய இவர்களையே இந்த பெருமை சாரும். நான் சோர்ந்து போன நேரத்தில் உன்னால் முடியும் என வழிநடத்தியவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.எனது ஆக்கத்திற்கும் வெற்றிக்கும் ஊக்கம் அளித்த அத்துனை உள்ளங்களுக்கும் நன்றி.!!!!!!!!

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:திருநாவுக்கரசு&oldid=1817185" இலிருந்து மீள்விக்கப்பட்டது