நூற்றாண்டு கண்ட தமிழ்திரை

தமிழ் சினிமா தொடங்கிய ஆண்டு 1916. இந்த ஆண்டில்தான் தமிழின் முதல்(சலனப்படம்)திரைபடம் வெளியானது. நடராஜ முதலியார் தயாரித்து இயக்கினார்.

1916ல் தொடங்கிய தமிழ் பேசாத தமிழ்படங்கள் 1932வரை .சுமார் 120 படங்கள் வெளியானது. பிறகு, பேசும் படம் என்னும் ஒலி (audio) தொழில்நுட்பம் வந்தது.

 1931 அக்டோபர்31 ம் தேதி தமிழின் முதல் பேசும்படமான "காளிதாஸ்"வெளியானது.ஆனால்,இது முழுமையான தமிழ் பேசவில்லை.

இப்படத்தில் நடித்தவர்கள் அவரவர் மொழிகளில் பேசியிருந்தனர்.முதல் பட வெற்றிக்குகாரணம், பேசும் சினிமா என்ற பிரம்மை மக்களிடம் பரவிக்கிடந்தது. பிறந்த குழந்தை எப்படி மழலை யில் பேசுமோ அது பல மொழி நடையில் பேசிய திரைபடம் ,மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு "கொஞ்சும்" நல்ல தமிழ் பேசியது. 1934ல் முழுக்க சென்னையில் தயாரிக்கபட்ட "சீனிவாசகல்யாணம்' .மூன்றரை வயது குழந்தை எப்படி புரியும்படி பேசுமோ அதே போல. 1935ல் பலரும் சினிமா தயாரிப்பில் குதித்தனர். இந்த ஆண்டில் மட்டும்32 படங்கள் வெளியானது. தமிழ் திரைத்துறை வேகமாக முன்னேறியது.

*1935தமழின் முதல் சமூக திரைபடம் வெளியானது. "டம்பாச்சாரி" விலாசம்.

அதே ஆண்டில் திருப்பூர் சண்முகானந்நா டாக்கீஸ் என்ற நிறுவனம். தமிழ்நாவலை திரைபடமாக்கினர். வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய "மேனகா " என்ற நாவலை திரைபடமாக எடுத்தனர். இந்த படத்தில் பலர் புதுமுக மாக அறிமுகம் செய்யப்பட்ட னர். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் .நடிப்பிசை புலவர் கே..ஆர். ராமசாமி. ஆகியோர்.

  1. 1936ல் தமிழ் திரை பல புதிய முகங்களை அறிமுகம் செய்தது.

தமழகத்தின் தவபுதல்வன் எம் ஜி ராமச்சந்திரன் " சதி லீலாவதி" திரைபடத்தின் மூலம் அறிமுகம் செய்தனர்; எம.கந்தசாமி முதலியார் தயாரிப்பாளர். இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கன். (அமெரிக்கர்) இருவரும் சேர்ந்து அறிமுகம் செய்தனர்.

  1. இத்திரைபடத்தில் மேலும் சில முகங்கள் ;பாலையா, என. எஸ்.கே

டி ஏ மதுரம். கதாநாயகன் எம. கே. ராதா. நாயகி எம.எஸ்.ஞானம். என பலரும் நாடக மேடையில் இருந்து திரை வெளிக்கு வந்தனர்.

  1. குடியின் தீமையை விளக்கும் கதை. இதை எழுதியவர் எஸ் எஸ் வாசன். இவரின் முதல் கதை இது.

இப்படி பலர் "முதல் "லுக்கு காரணமாக அமைந்த முதல் படம்.

×🎂

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:திரைஞானம்&oldid=2497596" இலிருந்து மீள்விக்கப்பட்டது