Thenmozhi Das - 1976 இல் மேற்குத் தொடர்ச்சி மலையில் மணலாறு என்னும் தேயிலைத் தோட்டப் பகுதியில் இவர் பிறந்தார். இயற்பெயர் சுதா. 1996 களில் எழுதத் தொடங்கியவர். இவருடைய முதல் கவிதைத் தொகுதியான இசையில்லாத இலையில்லை (2001) தேவமகள் அறக்கட்டளை விருது, சிற்பி இலக்கிய விருது, திருப்பூர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது கவித்தூவி விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளது. அநாதி காலம் (2003), ஒளியறியாக் காட்டுக்குள் (2007) , நிராசைகளின் ஆதித்தாய் (2016) , காயா (2017 )ஆகியவை இவருடைய பிற கவிதைத் தொகுப்புகளாகும் . இவர் ஒரு சிறுகதையாசிரியரும்கூட. ஈரநிலம் என்னும் திரைப்படத்தில் பாடல்களும் உரையாடலும் எழுதி, உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்.உரை நடை ஆசிரியராகவும் , பாடலாசிரியராகவும் இணை இயக்குநராகவும் தமிழ் திரை உலகில் பணியாற்றுகிறார் .இவர் உரையாடல் எழுதிய முதல் திரைப்படமான ஈரநிலம் என்ற திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதினை 2003 ஆம் ஆண்டு வழங்கியது ,

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தேன்மொழி_தாஸ்&oldid=3454348" இலிருந்து மீள்விக்கப்பட்டது