நல்வினை விஸ்வராஜு
இராசிபுரம் நகரில் வசிக்கும் சமூக ஆர்வாலளர் இராசிபுரத்தில் வழக்கறிஞர் தொழில் செய்து வருபவர் இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் இளங்கலை பட்டப்படிபினை இடையில் நிறுத்தி விட்டு திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றவர் 1995-ல் சேலம் அரசு வழகறிஞர் இரா.இராஜேந்திரன் (சேலம் மேற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்) அவர்களிடம் இளம் வழக்கறிஞராக சட்ட தொழில் துவங்கி பிறகு இராசிபுரத்தில் தனியாக வழக்கறிஞர் தொழில் செய்து வருபவர் இராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் "நல்வினை சட்ட அலுவலகம்" இவரது அலுவலகம் ஆகும் பாட்டாளி மக்கள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளராகவும் மாநில மாணவரனி செயலாளராகவும் பொறுப்பில் பனியாற்றியவர் தற்சமயம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாணவரனி ஆலோசராக உள்ளார்.. இராசிபுரம் பாதுகாப்பு இயக்கம் என்ற பொது சேவை அமைப்பின் தலைவர். விடுதலைகளம் (தொட்டிய நாயக்கர் சமூக முன்னேற்ற அமைப்பு,)உப்பிலிய நாயக்கர் சங்கம், தமிழக வன்னார் பேரவை,தமிழக மலைவாழ் பழங்குடி மக்கள் நல சங்கம், இராசிபுரம் ஆட்டோ தொழிலாளர் சங்கம், பழைய பேருந்து நிலைய டாக்சி உரிமையாளர் & தொழிலாளர் சங்கம், இராசிபுரம் டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சங்கம், திருவள்ளுவர் டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சங்கம், உள்ளிட்ட பல அமைப்புகளின் சட்ட ஆலோசகராக உள்ளார். நம்ம இராசிபுரம் இனையதள பத்திரிக்கையின் ஆசிரியர், மேலும் தொட்டிய நாயக்கர் முரசு உள்ளிட்ட சில இதழ்களின் சட்ட ஆலோசகராக பத்திரிக்கை பனியிலும் சேவையாற்றி வருகின்றார். பேஸ்புக்கில் இவர் நிர்வகிக்கும் "தகவல் அறியும் உரிமை சட்டம்- வழக்கறிஞர் நல்வினை" என்ற குழு சட்டம் சார்ந்த குழுக்களில் உலக அளவில் அதிக உறுப்பினர்களை மிக பெரிய குழு ஆகும். இராசிபுரம் பகுதி பொது மக்களின் பிரச்சினைகளுகாக தொடர்ந்து போராடி வருபவர். இவர் முன்னின்று நடத்திய இராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நாற்று நடும் போராட்டம் நகராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் சாக்கடை வாரும் போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் மாவட்டாட்சியருக்கு மலர்வளையம் வைத்து போராட்டம், கழுதைக்கு மனுக் கொடுத்து போராட்டம் போன்றவை குறிப்பிடதக்கவை பொது மக்கள் பிரச்சினைகளுக்கு போராடியதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை சந்திந்தவர். அதற்காக பலமுறை சிறையும் சென்றுள்ளவர்.